என் மலர்
நீங்கள் தேடியது "NLC issue"
- சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க என்எல்சி ஒப்புதல் அளித்துள்ளது.
- செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.
பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன் வந்தது. என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது.
சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க என்எல்சி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே நிலத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், "இந்த இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்டு மாதம் 6ம் தேதிக்குள் வழங்கும்படி" சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்எல்சி பாதுகாக்க வேண்டும்" என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் நடவடிக்கை.
- போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.
பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது பாசன நிலம் பாதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட பலர் என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இதை எதிர்த்து என்எல்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு சட்டத்தை கையில் எடுத்து அனுமதிக்கப்படாத இடத்தில் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுப்போம் எனவும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காவல்துறை குறிப்பிடும் இடங்களில் அமைதியாக போராட்டம் நடத்திக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
- வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
- நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.
நெய்வேலி என்.எல்.சி.யில் பணி வழங்கப்பட்ட வட இந்தியர்கள் 28 பேரின் முழு விவரங்களையும் என்எல்சி நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது குறித்து என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து என்எல்சி நிறுவனம் கூறியதாவது:-
என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது.
என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது.
வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது.
நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும்.
இவ்வாறு கூறியது.
- என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு.
- என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.
வேலை நிறுத்த முடிவை எதிர்த்து என்எல்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிாலளர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுகவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்எல்சி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.