என் மலர்
நீங்கள் தேடியது "non-vegetarian restaurants"
- அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
- 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அசைவஓட்டல்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 4 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பேக்கரிகளில் உணவு பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.