search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noodles Recipes"

    • கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ராகி முட்டை நூடுல்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ராகி நூடுல்ஸ் - இரண்டு கப்

    முட்டை - 3

    நீளமாக நறுக்கிய குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - ஒரு கப்

    வெங்காயம் - 2

    பூண்டு - 2 பல்

    வீட்டில் செய்த இனிப்பு தக்காளி சட்னி - தேவையான அளவு

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    வெண்ணெய் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து உதிரியாக பொரித்து வைக்கவும்.

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ராகி நூடுல்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் எடுத்து, வடிகட்டி உடனே குளிர்ந்த நீரை ஊற்றி அலசி, தண்ணீர் வடியும் வரை தனியே வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி, சூடானதும் பூண்டை நசுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் இனிப்பு தக்காளி சட்னி சேர்த்து வதக்கவும்.

    பாதி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, நூடுல்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இறுதியில் பொரித்த முட்டை, மிளகுத்தூள் தூவி நன்றாக கலந்து இறக்கி, லஞ்ச் பாக்ஸில் `பேக்' செய்யவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள்.
    • முட்டை நூடுல்ஸில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் சமைக்க

    ஹக்கா நூடுல்ஸ் - 300 கிராம்

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தண்ணீர்

    உப்பு - 1/2 தேக்கரண்டி

    முட்டை நூடுல்ஸ் செய்ய

    வெங்காயம் - 1

    குடைமிளகாய் - 1/2

    நறுக்கிய பூண்டு - 1 மேசைக்கரண்டி

    நறுக்கிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி

    வெங்காயத்தாள்

    கேரட் - 1

    முட்டைகோஸ் - 1 கப்

    வினிகர் - 2 தேக்கரண்டி

    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி

    சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    முட்டை - 4

    மிளகு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய், முட்டைகோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் தேவையான அளவு உப்பு, நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

    * ஐந்து நிமிடத்திற்கு பிறகு நூடுல்ஸை வடிகட்டி, நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் ஊற்றி பரப்பி விடவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

    * வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் , பாதி வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * காய்கறிகளை நன்கு வதக்கிய பின்பு இதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றி காய்கறிகளுடன் கலக்கவும்.

    * முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இந்த கலவையில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக மீதி உள்ள வெங்காயத்தாளை நூடுல்ஸ் மேல் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான முட்டை வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மேகி பாக்கெட் - 1

    முட்டை - 2

    கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

    குடைமிளகாய் - 1

    தக்காளி - 1 (சிறியது)

    ப.மிளகாய் - 3

    வெங்காயம் - 1 (சிறியது)

    உப்பு, எண்ணெய் - சிறிதளவு

    மஞ்சள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

    மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

    பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.

    அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.

    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நூடுல்ஸ் - அரை கப்,

    நறுக்கிய வெங்காயம் - அரை கப்,

    குடைமிளகாய் - 1

    கேரட் - அரை கப்,

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    நூடுல்ஸை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    குடைமிளகாய், கேரட்டை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு - பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அதில் கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துகள் அடங்கியுள்ளன.
    • சிறுதானியங்கள் நூடுல்ஸ் வடிவிலும் கிடைக்கின்றன.

    தேவையான பொருட்கள்

    ராகி நூடுல்ஸ் - 1 கப்

    பெரிய வெங்காயம் - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கேரட் - 1/2 கப்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    குடை மிளகாய்- 1

    பூண்டு- 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

    மிளகுத்தூள்- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ராகி நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்

    பின், தண்ணீரை வடிகட்டி சிறிது எண்ணெய் சேர்த்து உதிர்த்து வைக்கவும். எண்ணெய் சேர்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

    மற்றொரு வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிய பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், குடை மிளகாய், முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதில் வேகவைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்

    மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் அதில் இன்னும் சிறிதளவு வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான சுவையான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

    • மலேசிய நாட்டில் பிரபலமாக இருக்கும் நூடுல்ஸ் சூப் வகை 'லக்சா லீமக்'.
    • இதை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு விதமாக தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 50 கிராம்

    புரோக்கோலி - 50 கிராம்

    சிகப்பு குடைமிளகாய் - 50 கிராம்

    காளான் - 50 கிராம்

    டோபு - 50 கிராம்

    நூடுல்ஸ் - 100 கிராம்

    எண்ணெய் - தேவையான அளவு

    தேங்காய்ப்பால் - 1 கப்

    வெல்லம் - 1 தேக்கரண்டி

    அரைப்பதற்கு:

    பாதாம் பருப்பு - 12

    மிளகாய் வற்றல் (தண்ணீரில் ஊறவைத்தது) - 10

    மிளகாய் வற்றல் (உலர்ந்தது) - 2

    வெங்காயம் - 1

    பூண்டு - 2 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    தனியா - 1 டீஸ்பூன்

    எலுமிச்சைப் புல் - சிறிதளவு

    மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

    செய்முறை:

    காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

    நூடுல்ஸை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    பாதாம் பருப்பை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தனியா, ஊறவைக்காத மிளகாய் வற்றல், சிறிது எலுமிச்சைப் புல், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் ஊறவைத்த பாதாம் மற்றும் மிளகாய் வற்றலும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதினைப் போட்டு 15 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.

    இந்தக் கலவை தொக்கு பதத்திற்கு வந்து, எண்ணெய் பிரியும் நிலையில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    பின்னர் ஒரு கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கலந்து சிறிது நேரம் ஆறவிடவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காளான் மற்றும் டோபுவை போட்டு வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதே எண்ணெய்யில் மற்ற காய்கறிகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து வடிகட்டி எடுக்கவும்.

    பரிமாறும் முறை:

    ஒரு கிண்ணத்தில் மசாலா கலந்த கலவையை ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.

    அதன் மேல் வேகவைத்த காய்கறிகள், வறுத்த காளான் மற்றும் டோபு சேர்த்து பரிமாறவும்.

    • தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன், நூடுல்ஸ் சேர்த்து சூப் செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - அரை பாக்கெட்

    சிக்கன் - அரை கிலோ

    கேரட் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகு பொடி - தேவையான அளவு

    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    ஸ்பிரிங் ஆனியன் - 3

    பூண்டு - 5 பற்கள்

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - கையளவு

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நூடுல்ஸை தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அதோடு காய்கறிகளையும், உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த நூடுல்ஸ், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி.

    ×