search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North India"

    • காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது.
    • காற்று மாசுவில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில், வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு தேசிய அவசரநிலை என்றும் தீர்க்கமான நடவடிக்கை தேவை எனவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வட இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது ஒரு தேசிய அவசரநிலை - இந்த பொது சுகாதார நெருக்கடி நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் திருடி, முதியவர்களை மூச்சுத் திணறச் செய்யும் , சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பேரழிவு எண்ணற்ற உயிர்களை கொல்லும்.

    நம்மில் உள்ள ஏழ்மையானவர்கள் தங்களைச் சுற்றியுள்ள நச்சுக் காற்றிலிருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சுத்தமான காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றனர். குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள், மில்லியன் கணக்கான உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சுற்றுலா வீழ்ச்சியடைந்து, நமது உலகளாவிய நற்பெயர் சிதைந்து வருகிறது.

    மாசு மேகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை உள்ளடக்கியது. அதை சுத்தம் செய்ய அரசாங்கங்கள், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களிடம் இருந்து பெரிய மாற்றங்கள் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவைப்படும். எங்களுக்கு ஒரு கூட்டு தேசிய பதில் தேவை, அரசியல் பழி விளையாட்டுகள் அல்ல.

    இன்னும் சில நாட்களில் பார்லிமென்ட் கூடும் என்பதால், எம்.பி.க்கள் அனைவருக்கும், நெருக்கடியான நம் கண்கள் எரிச்சல் மற்றும் தொண்டை வலி நினைவுக்கு வரும். இந்த நெருக்கடியை இந்தியா எப்படி ஒருமுறை முடிவுக்கு கொண்டுவருவது என்று ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
    • மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட இந்தியாவிலும் அண்டை நாடான பாகிஸ்தானிலும் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் புகை மூட்டம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. நேற்று காலை அந்நகரில் காற்றின் தரக் குறியீடு 2000 என்ற அளவைத் தாண்டி மோசமடைந்தது. இதனால் நகரம் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

    பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமையான அளவில் மோசமடைந்ததால் காற்றின் மாசு அளவைக் குறைக்க பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    எனவே நவம்பர் 17ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்வேறு நகரங்களில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான காற்றின் தரம் காரணமாக தொண்டை வலி ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மமேலும் லாகூர் உலகின் மிகுவும் மாசுபட்ட நகரமாக மாறி உள்ளது.

     

    ஒரு கன மீட்டருக்கு ஐந்து மைக்ரோகிராம்களுக்கு மேல் உள்ள எதையும் அபாயகரமானது என்று உலக சுகாதர அமைப்பு வரையறுக்கிறது. ஆனால் இங்குள்ள நகரங்களில் காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 947 மைக்ரோகிராம்கள் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு அபாயம் என்று வரையறுத்ததை விட 189.4 மடங்கு அதிகமாகும்.

    • தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி.
    • கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.

    இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாட்டில் வடக்குப் பகுதிகளில் நிலவும் வெப்ப அலை காரணமாக கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.

    தொழில்துறை மொத்த விற்பனை புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 3,50,257 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையான 3,35,436 வாகனங்களை விட 4.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியாகும்.

    அதன்படி, ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படையில் பார்ப்போம்..

    மாருதி சுசுகி

    மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 1,57,184 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,51,606 வாகன விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை ஒப்பிடுகையில், இது 3.5 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதியில், இந்நிறுவனம் மே 2023-ல் 26,477 வாகன எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 17,367 யூனிட்களை மட்டுமே பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ்

    பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் டாடா மோட்டார்சின் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்தில் 74,973 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 76,766 ஆக இருந்தது.

    மே 2023ல் 45,878 யூனிட்களுடன் ஒப்பிடும்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 46,697 ஆக இருந்தது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

    கடந்த ஆண்டு மே மாதத்தில் 106 யூனிட்களாக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி 378 யூனிட்களாக இருந்தது - இது 257 சதவீதம் வளர்ச்சி.

    மே மாதத்தில் டாடா ஸ்டேபில் இருந்து எலெக்ட்ரிக் வாகன விற்பனை 5,558 யூனிட்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் 5,805 யூனிட்களுடன் ஒப்பிடும்போது ஏற்றுமதிகள் உட்பட - 4 சதவீதம் சரிவு.

    எம்&எம்

    மஹிந்திரா & மஹிந்திரா, அதன் மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 71,682 வாகனங்களாக இருந்தது.

    மே 2023-ல் நிறுவனத்தின் மொத்த விநியோகங்கள் அதன் டீலர்களுக்கு 61,415 ஆக இருந்தது.

    கியா இந்தியா

    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான கியா இந்தியா கடந்த மே மாதத்தில் 19,500 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 18,766 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

    ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சோனெட் 7,433 வாகனங்களுடன் அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது. தொடர்ந்து, செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் முறையே 6,736 மற்றும் 5,316 வாகனங்களுடன் அடுத்தடுத்து உள்ளன.

    டொயோட்டா கிர்லோஸ்கர்

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) மே மாதத்தில் மொத்த மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 24 சதவீதம் அதிகரித்து 25,273 வாகனங்களாக உள்ளது. கடந்த மாதம், உள்நாட்டில் விற்பனை 23,959 ஆகவும், ஏற்றுமதி 1,314 ஆகவும் இருந்தது.

    எம்ஜி மோட்டார்ஸ்

    எம்ஜி மோட்டார் இந்தியா சனிக்கிழமையன்று மொத்த விற்பனையில் 5 சதவீதம் சரிந்து 4,769 வாகனங்களாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மே-ல் டீலர்களுக்கு 5,006 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

    ராயல் என்ஃபீல்டு

    மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு, மே மாதத்தில் மொத்த விற்பனையில் 8 சதவீதம் சரிந்து 71,010 வாகனங்களாக இருந்தது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 77,461 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் விற்பனை 63,531 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மே மாதத்தில் 70,795 ஆக இருந்தது.

    • ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
    • வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.

    நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-ஐ மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2-3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.

    எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றார்.

    தேசிய தலைநகர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியா, தென் இந்தியா என்று பிரித்து பேசும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் எப்படி தேசிய தலைவராக முடியும்? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். #TamilisaiSoundararajan #PMModi #RahulGandhi
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்தபோது, பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

    இந்த நிலையில், ராகுல்காந்திக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 10 கேள்விகளை கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * தமிழக மக்கள் மீது அன்பு உண்டு என்று தமிழர்களுக்காக உருகும் நீங்கள் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக காவிரி பிரச்சினை மற்றும் மேகதாது அணை போன்ற தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவிடம் காவிரி நீரின் தமிழகத்தின் உரிமை பற்றி என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா?.

    * பிரதமர் வேட்பாளர் ஒருவர் பெயரை அறிவித்து தேர்தலை சந்திப்பது அராஜகம் என்று கூறும் ராகுல்காந்தி, சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே குடும்பத்தின் கையில் ஒரு தேசிய கட்சி இருப்பதும் நாட்டின் பிரதமராக இருப்பதும் ஒரு பெரிய அராஜகம் இல்லையா?

    * ஒரே கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்லும் எனக்கூறும் ராகுல்காந்தி, கடந்த காலத்தில் உங்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் கூட்டாக ஊழல் நடைபெற்றது உங்களுக்கு தெரியாதா?

    * முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேலூர் சிறையில் உங்கள் சகோதரி பிரியங்கா எதற்காக ரகசியமாக சந்தித்தார் என்பதை விளக்க முடியுமா?.

    * இலங்கைத்தமிழர் படுகொலைக்கு பொங்கியவர்கள், கண்ணீர் விட்டவர்கள், கள்ளத்தோணியில் சென்றவர்கள், கோடம்பாக்கத்தில் சென்று சினிமா பாணியில் ராணுவ உடை வாங்கி பாவனை காட்டியவர்கள், எல்லாம் பொன்னாடை போர்த்தி தேர்தலுக்காக நாடகமாடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கேட்பது நியாயமா? அப்பாவி இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் ஆட்சியின் பங்கு எதுவுமில்லை என்று பதில் கூற உங்களுக்கு தைரியமிருக்கிறதா?.

    * வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை 2 பிரிவுகளாக பிரித்து பேசும் ராகுல், நீங்கள் எப்படி தேசிய தலைவர் ஆவீர்கள்?.



    * மதச்சார்பின்மையை ஆதரிக்கிறோம் எனக்கூறும் ராகுல், உங்கள் தமிழக கூட்டணி கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்று கேட்டீர்களா?

    * ஊழல் இல்லாத நல்லாட்சி புரிந்த காமராஜர் பெயரைச்சொல்லி மோடி ஓட்டுக் கேட்கிறார் என்று கூறுகிறீர்களே, அதே காமராஜரை ஒதுக்கி வைத்தது உங்கள் காங்கிரஸ் கட்சி தானே?

    * பிரதமர் மோடியின் ‘மேக்கின் இந்தியா’ திட்டத்தை போன்றே ‘மேட் இன் தமிழ்நாடு’ என தமிழ்நாட்டை மாற்றுவோம் எனக்கூறும் ராகுல், புதிதாக வேறு ஏதேனும் திட்டத்தை துவக்க தெரியாதா? உங்கள் சொந்த தொகுதி அமேதியில் கொண்டு வந்த தொழிற்சாலைகளை பட்டியலிட முடியுமா? இதில் உங்கள் சொந்த தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதையும் செய்யாமலே தமிழ்நாட்டை ‘மேட் இன் தமிழ்நாடு’ என மாற்றுவோம் எனக்கூறுவது நியாயமா?

    * தமிழகத்தில் மோடியின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறீர்களே, கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கியது யார் என்று கூறமுடியுமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TamilisaiSoundararajan #PMModi #RahulGandhi
    ×