என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » norway chess
நீங்கள் தேடியது "Norway Chess"
- நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.
நார்வே:
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.
நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார்.
இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் நடைபெற்று வரும் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த்த டிரா செய்துள்ளார்.
நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பல சாம்பியன் பட்டங்களை வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் தனது முதல் ஆட்டத்தில் திங்கட்கிழமை (28-ந்தேதி) அர்மெனியாவின் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் 39 நகர்த்தலுக்குப் பின் டிரா செய்தார். இதனால் முதல் இரண்டு போட்டிகளையும் ஆனந்த் டிரா செய்துள்ளார்.
தொடக்க சுற்றில் மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். மற்ற அனைவரும் டிரா மட்டுமே செய்தனர். ஆனால் 2-வது சுற்றில் செர்ஜெய் கர்ஜாகின் எதிராக டிரா செய்தார்.

×

X