என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Novak Djokovic"

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
    • இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மியாமி:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.

    பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜாகுப் மென்சிக் 7-6 (7-4) மற்றும் 7-6 (7-4 ) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக மென்சிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் டிமித்ரோவ் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஜாகுப் மென்சிக் அல்லது டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4) என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ஜோகோவிச், டிமித்ரோவ் உடன் மோதுகிறார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் பல்கேரியாவின் டிமித்ரோவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-4 என எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • ஜெசிகா பெகுலா 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அர்ஜென்டினாவின் கமிலோ உகோ காரபெல்லி ஆகியோர் மோதினர். இதில் ஜோகோவிச் 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மற்றும் ரஷ்யாவின் அன்னா நிகோலாயெவ்னா கலின்ஸ்காயாவும் மோதினர். இதில் 3-7, 6-2, 7-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

    • மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    புளோரிடா:

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஜேக்கப் பெர்ன்லே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-2, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • விம்பிள்டனில் 7 முறை, அமெரிக்க ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றார்.

    பெல்கிரேட்:

    செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2003-ம் ஆண்டு 15 வயதில் தொழில்முறை வீரராக மாறியதிலிருந்து டென்னிசில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறையும், விம்பிள்டன் தொடரில் 7 முறையும், அமெரிக்க ஓபனில் 4 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    ஜோகோவிச் கடந்த ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதன்பின் கடந்த ஆண்டு முதல் தான் பங்கேற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளால் தடுமாறு வருகிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மாண்டோ-கார்லோ மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதியில் தோல்வி

    இத்தாலி ஓபன் தொடரின் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    ஜெனீவா ஓபன் தொடரின் அரையிறுதியில் தோல்வி

    பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் காயம் காரணமாக பாதியில் விலகல்

    விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி

    அமெரிக்க ஓபனில் 3வது சுற்றில் போராடி தோல்வி

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் தோல்வி

    பிரிஸ்பேன் ஓபன் தொடரின் காலிறுதியில் தோல்வி

    ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் காயம் காரணமாக பாதியில் இருந்து விலகல்.

    கத்தார் ஓபனில் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    சமீபத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இப்படி, கடந்த ஆண்டில் நடைபெற்ற முன்னணி தொடர்களில் தோல்வியைச் சந்தித்து வரும் ஜோகோவிச் விரைவில் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.
    • என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் தோல்வி குறித்து கண்ணீர் விட்டு ஜோகோவிச் பேசியது சுற்றி இருந்தவர்களை உருக செய்தது.

    தோல்வி குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-



    20 வயதில் முதிர்ச்சி அடைந்த வீரர் போல் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். அவரது மன உறுதியை பாராட்டுகிறேன். பலம் மற்றும் பலவீனங்களை கொண்டுள்ள ஒரு முழுமையான வீரராக திகழ்கிறார். அவரது சர்வீஸ்கள் சிறப்பாக இருந்தது.

    விம்பிள்டன் பட்டத்தை பெற அவர் தகுதியானவர். விம்பிள்டனில் சவால் நிறைந்த இறுதிப் போட்டிகளில் இதற்கு முன்பு நான் வெற்றி பெற்று இருக்கிறேன். அதில் 2 போட்டிகளில் நான் தோல்வியை தழுவி இருக்க வேண்டியது. புல்தரை மைதானமான இந்த போட்டியில் நான் தோல்வி அடைவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.

    2019 இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருக்கு எதிராக தான் வெற்றி பெற்றிருக்கக் கூடாது. அதற்கான பழிவாங்கல் தான் இன்று என்னை அல்கராஸ் வீழ்த்தியது.

    மேலும் ஜோகோவிச் நேர்காணலை நிறுத்துவதற்கு முன் கண்ணீர் சிந்தி அழுதார்.

    ஆமாம், என் மகன் இன்னும் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. லவ் யூ, என்னை ஆதரித்ததற்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை, இது போன்ற போட்டிகளில் நாம் ஒருபோதும் தோற்க விரும்புவதில்லை. ஆனால் நன்றாக தெரியும், இந்த கன நேர உணர்ச்சிகள் எல்லாம், தீர்ந்த பின்னர் நான் மிகவும் பெருமை உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் கடந்த காலங்களில் பல நெருக்கமான போட்டிகளில் வென்று பட்டத்தையும் வென்றுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
    • தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார்.

    செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். அந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார். இந்த செயலுக்காக அவருக்கு 8,000 டாலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம்.

    8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.

    சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள ஜோகோவிச், அது விரக்தியை ஏற்படுத்திய தருணம் எனவும், அல்கராஸ் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தினார் எனவும், வெற்றி பெற தகுதியான வீரர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி ஒன் தொலைக்காட்சியில் சுமார் 11.3 மில்லியன் பேர்கள் இறுதிப் போட்டியை கண்டுகளித்துள்ளனர். டென்னிஸ் மட்டையை உடைத்தது மட்டுமின்றி, நடுவர் கடிந்துகொள்ளும் நிலைக்கும் ஜோகோவிச் தள்ளப்பட்டார்.

    • நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    இந்த போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றில் தோற்றாலும் கூட முதல் இடத்திற்கு பிரச்சினை இல்லை.

    ×