search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NT Rama Rao"

    • ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
    • என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

    திருப்பதி:

    ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர்.

    இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது" என்றார்.

    இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியதாவது:-

    ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.

    ரஜினிகாந்த் உண்மை அறிந்து பேசினாரா என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் அனைவரும் விரும்பக்கூடியவர். ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.

    தெலுங்கு தேசம் கட்சியின் பஜனைக் கூட்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் சந்திரபாபு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்தாரா.

    ரஜினிகாந்த் தன் உரையில் "விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்.டி.ஆர் ஆசிகளை பொழிகிறார்' என்று குறிப்பிட்டார். என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

    பிரதமராக கூடிய தகுதி கொண்ட என்.டி.ராமராவை சூழ்ச்சி செய்து அவரது பலத்தால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை அவருக்கு எதிராக திசை திருப்பி சட்டப்பேரவையில் இருந்து அழுது கொண்டு என்.டி.ராமராவ் வெளியே வர காரணமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு.

    அப்போது என்.டி. ராமராவ் பேசுகையில், சந்திரபாபு ஒரு திருடன். ஈரத் துணியை கழுத்தில் போட்டு இறுக்கக்கூடியவன் என பேசினார்.

    சந்திரபாபு நாயுடு துரோகம் குறித்து என்.டி. ராமராவ் பேசியது ரஜினிகாந்துக்கு தெரியாதா. அவருக்கு தெரியவில்லை என்றால் என்.டி. ராமராவ் பேசிய சிடி என்னிடம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறேன். பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

    ஐதராபாத் நியூயார்க் நகரை போன்று மாறி இருப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு விஷன் காரணம் என கூறியுள்ளார்.

    2003-வது ஆண்டுடன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அதன்பின்னர், இப்போது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளாக ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு, அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்கமுடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும்.

    விஷன் 2047 என சந்திரபாபு அறிவித்து உள்ளார். அதுவரை அவருடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோடாலி ஸ்ரீவெங்கடேஸ்வரராவ் எம்.எல்.ஏ. ரஜினி காந்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் ஹீரோவாகவும், இங்கு ஜீரோவாகவும் இருக்கும் ரஜினிகாந்தின் வார்த்தைகளை ஆந்திர மாநில மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.

    ‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.

    இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna 

    கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
    இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.

    மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

    படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.



    மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.

    பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika

    தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
    சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.

    தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.



    ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரின் அருகேயுள்ள கனூரு பகுதியில் அமைந்துள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய விருதானபாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ×