என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "numbness"
- சியாட்டிகா வலியால் கால் மரத்து விடும்.
- இடுப்பு பகுதியில் உள்ள தண்டு நரம்புகள் அதனை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
சியாட்டிகா என்பது நரம்பின் பெயர் இது முதுகில் தொடங்கி குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலினுள் இருக்கும் ஒற்றை நரம்பும் சியாடிக் நரம்பை பாதிப்புக்குள்ளாக்கும் போது உண்டாகும் வலி. வலி என்று சொல்ல முடியாத அளவுக்கு தாங்க முடியாத உபாதையை உண்டாக்கும் இந்த வலியால் கால் மரத்து விடும். தொடையில் இருந்து பின்னங்கால் வரை வலியை ஏற்படுத்தும். இந்த வலியின் தீவிரமானது அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும்.
சியாட்டிகா வலி இடுப்பு பகுதியில் ஆரம்பித்து பிட்டப்பகுதி, தொடையின் பின்பகுதி, கால் முழுவதுமாக கால் பெருவிரல் வரை வலி இருக்கும். ஏனென்றால் இடுப்பு பகுதியில் இருந்து தான் சியாட்டிகா நரம்பு பகுதி அந்த இடுப்பு பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இடுப்பு பகுதியில் உள்ள தண்டு நரம்புகள் அதனை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது. அல்லது விட்டு விட்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் வலிக்கும். தொடைப்பகுதி மட்டும் வலிப்பது, கால் பெருவிரல் உணர்வற்று இருப்பது இவையெல்லாம் இந்த சியாட்டிகா நரம்புகள் அழுத்தப்படும்போது வலி ஏற்படுகிறது.
சியாட்டிகா நரம்பு பிரச்சினை இருப்பதை எளிதாக கண்டறியலாம். அதற்கு நன்ற படுத்துக்கொண்டு முட்டியை மடக்காமல் கால்களை உயர்த்தும்போது வலி ஏற்படும். பெருவிரலில் இருந்து இடுப்பு வரை வலி இருக்கிறது என்றால் நிச்சயமாக அது முதுகுத்துண்டு அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
உணவுமுறைகளின் இந்த வாதத்தன்மையை குறைப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுகளை புளிப்பு சுவை உள்ள பழங்கள், உணவுகளை ஆகியவற்றை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி மற்றும் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுமட்டுமில்லாமல் வாயு தரக்கூடிய உணவுகள் அதாவது மொட்ச்சை, கொண்டைகடலை, பயறுவகைகள் ஆகிவற்றை மூட்டு வலி இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வது நல்லது.
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சியாட்டிகாவுடன் தொடர்புடைய அழற்சி மற்றும் வலியை குறைக்க உதவும்.
ஒரு டம்ளர் பால், அரை டம்ளர் தண்ணீர் , 5 பூண்டு பல் எடுத்துகொள்ளவும். பூண்டை இடித்து பால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு இறக்கி சிறிது நேரம் குளிர வைத்து சுவைக்கு தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் ஒரு டம்ளர் பூண்டு பால் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
சியாட்டிகாவால் வலி இருக்கும் இடத்தில் சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் நிச்சயம் பலன் அளிக்கும். குளிர்ந்த நீர் அல்லது சற்று சூடாக இருக்கும் நீர் ஏதேனும் ஒன்றை எடுத்து மெல்லிய துணியை அதில் நனைக்கவும். வலி இருக்கும் இடங்களில் மெதுவாக ஒத்தடம் போல் வைத்து ஒற்றி எடுக்கவும். குறிப்பாக வலி அதிகம் இருக்கும் இடங்களில் தொடர்ந்து 5 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் வலி உபாதை குறையும்.
இஞ்சி எண்ணெய் முதுகுவலிக்கு தீர்வாக இருக்கும். இஞ்சியில் இருக்கும் ஜிங்கெரால் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது வலியை குறைக்க செய்யும்.
இஞ்சி எண்ணெயுடன் சில துளி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்துவிடுங்கள். இதை அடி முதுகின் நுனிவரை லேசாக மசாஜ் செய்வது போல் தேய்த்துவிடுங்கள். இஞ்சி எண்ணெய் எரிச்சலை ஆலிவ் எண்ணெய் தவிர்த்துவிடும்.
தினமும் காலையில் எழுந்ததும் பிறகு இரவு தூங்குவதற்கு முன்பும் இதை தடவினால் போதுமானது. இஞ்சி எண்ணெய்க்கு மாற்றாக புதினா எண்ணெயும் பயன்படுத்தலாம்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆனது பயோ ஆக்டிவ் ஆக செயல்படுகிறது. இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது நரம்பு வலியையும் இடுப்பு மூட்டுகளில் உண்டாகும் வலியையும் குறைக்க செய்யும்.
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து குழைத்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இதை வலி இருக்கும் இடங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் வலியின் தீவிரத்தை கட்டுபடுத்தலாம்.
வெந்தயம் வலி நிவாரணியாக செயல்படும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சியாட்டிகா வலியின் தீவிரத்தை குறைக்க செய்யும். வெந்தயத்தை பொடியாக்கி பாலில் கலந்து குழைத்து பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும்.
இதை வலி இருக்கும் இடங்களில் தடவி உலரும் வரை விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். தினமும் காலையில் குளியலுக்கு முன்பும், இரவு தூங்கும் போதும் இதை செய்து வந்தாலே பலன் கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்