search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NZ vs AFG"

    • கான்வே காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.
    • மைக்கேல் பிரேஸ்வெலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இந்தியாவில் நடைபெறும். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் இடம பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலினுக்கு பதிலாக அஜாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுமார் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல்ரவுண்டர் மிக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டிம் சவுதி அணியின் கேப்டனாக தொடர்கிறார். டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் இடம பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நொய்டாவில் நடக்கிறது.

    இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது டெஸ்ட் செப்டம்பர் 26-ந்தேதியும் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    ×