என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI Ranking"

    • பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது நபி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் குல்தீப் யாதவ் 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மாவை 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளியுள்ளார் சுப்மன் கில்.
    • விராட் கோலி 4 இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நாக்பூர் (87) மற்றும் கட்டாக் (60) போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சுப்மன் கில் 781 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்க 5 புள்ளிகள்தான் தேவை.

    இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு போட்டியில் பாகிஸ்தான் இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் சிறப்பான விளையாடினால் முதல் இடத்தில நீடிக்க வாய்ப்புள்ளது.

    கட்டாக் போட்டியில் சதம் (119) விளாசினாலும் ரோகித் சர்மா 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவர் 773 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார். நாக்பூர் போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.

    அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடங்கள் முன்னனேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ×