search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officers inspect"

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு :

    வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே உள்ள மீன் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது பழைய மீன்கள், கோழிக்கறி ஆகியவை மசாலா தடவி இரவு நேர விற்பனைக்கு குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருப்பதை உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கண்டறிந்தார்.

    இது போன்ற காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது.
    • சேதமடைந்த கடைகளை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் , துணைத் தலைவர் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    கொடை க்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இரண்டு நாட்களாக தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த கடைகள் மற்றும் சுற்றுலா பகுதியை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர் . மேலும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    • புதிதாக பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது.
    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேஷ், திட்ட குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோருடன் இணைந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைப்பது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.
    • பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

    ஜெ நகர் பழங்குடியினர் காலனி தொகுப்பு வீடுகளில் கனமழை காரணமாக மழை நீர் உள்ளே புகுவதை தடுக்கும் பொருட்டு, தற்காலிக நிவாரணமாக சுமார் 32 குடும்பத்தினருக்கு தார்ப்பாய்கள் வழங்க டி.வி.எஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர்(SST) ஏற்பாடு செய்திருந்தனர். இதனை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்வில் வில்பட்டி ஊராட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி வில்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வாசு, வார்டு உறுப்பினர் சாய்ராம்பாபு, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பழுதான தொகுப்பு வீடுகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு கோட்டாட்சியர் தங்கள் வீடுகளை ஆய்வு செய்யவே வந்ததாகவும் விரைவில் சேதமடைந்துள்ள வீடுகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    • பாலில் கலப்படம் உள்ளதாக வந்த புகாரின்பேரில் நடவடிக்கை
    • ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி.

    ஆரணி:

    ஆரணியில் டீ கடைகள் மற்றும் ஓட்டல்களில் டீதூள் பாலில் கலப்படம் உள்ளதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலேஷ் ஆகியோர் தலைமையில் டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் ஆரணி பஜார் வீதி சத்தியமூர்த்தி சாலை மார்க்கெட் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர்.

    இதில் தரமற்ற முறையில் டீ தூள்கள் பயன்படுத்தப்படுகின்றதா எனவும் பாலில் தண்ணீர் கலக்கபட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டு டீ தூள்கள் பால் ஆகியவற்றை சோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்கு பின்னரே நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

    குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக கொல்லிமலையில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். #ChildKidnap
    கொல்லிமலை:

    குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழு தொடர்ந்து சுகாதார நிலையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட புகார் எழுந்ததையடுத்து, ஆய்வு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஏற்கனவே செயல்பட்டு வந்த 3 குழுக்களை நிறுத்திவிட்டு, ஆய்வை தீவிரப்படுத்துகின்ற வகையில், புதியதாக 16 குழுக்களை அமைத்து இன்று மற்றும் நாளை (30-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.

    இதில் ஒவ்வொரு குழுவிலும் தலா அரசு டாக்டர்-1, சுகாதார மேற்பார்வையாளர்-1, ஆய்வாளர்-1, பகுதி சுகாதார நர்சு-1, சமுதாய சுகாதார நர்சு-1, கிராம சுகாதார நர்சு-1, பயிற்சி பள்ளி நர்சு-1 என 7 பேர் வீதம் இடம் பெற்றுள்ளனர்.

    இன்று காலை 6 மணி முதல் இவர்கள் கொல்லிமலையில் உள்ள 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் தலா ஒவ்வொரு குழுவாக சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இங்கு பிறப்பு சான்றிதழ் பதிவேடு, ஊழியர்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்களின் வருகை பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்த விபரம் பதிவேடு, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி பதிவேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பதிவேடுகளில் இருக்கும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று குழந்தைகள் குறித்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அரியூர் நாடு, வளப்பூர் நாடு, செம்மேடு, சோளக்காடு, மேக்னிக்காடு உள்பட பல கிராமங்களில் வீடு வீடாக சென்று சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் விபரம் குறித்தும் கணக்கெடுத்து வருகின்றனர்.

    அப்போது அதிகாரிகள் பெற்றோர்களிடம் எப்போது குழந்தை பிறந்தது?, தனியார் மருத்துவமனையா? அல்லது அரசு மருத்துவமனையில் பிறந்ததா?, எத்தனை குழந்தை உள்ளது?, இந்த குழந்தை இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கு படிக்கிறார்கள்? என பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கூறிய தகவல்களை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    இந்த ஆய்வு பணி நாளை (30-ந்தேதி) முடிவடைந்ததும், இது குறித்த முழுமையான ஆய்வு அறிக்கை சென்னையில் உள்ள தலைமை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே கொல்லிமலை பவர்காடு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டிரைவர் முருகேசன் என்பவர் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChildKidnap
    குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இருந்த போதும் கொழுக்குமலை அருகே 6000 அடி உயரத்தில் உள்ள திப்படா மலைப்பகுதிக்கு பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலம் மூணாறு வழியாக சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக கேரள வனத்துறை சார்பில் ஜீப்புகளும் இயக்கப்பட்டு வந்தன. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி புகார் அளித்தார்.

    அதன் பேரில் குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குமரேசன், ராமதாஸ், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன அலுவலர் மகேந்திரன், போடி வனச்சரகர் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் திப்படா மலைப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு அவர்கள் அளித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் கவுதம் தெரிவிக்கையில், திப்படா மலைக்குன்று கேரள-தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் ஊராட்சியிடம் சுற்றுலா பயணிகள் தற்காலிக அனுமதி பெற்று இங்கு வருகின்றனர்.

    இது குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அவர்கள் உறுதியான நடவடிக்கையை விரைவில் அறிவிப்பார்கள்.

    வனப்பகுதியில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தீ விபத்து நடக்கும் காலமாகும். இதன் காரணமாகவே இந்த கால கட்டங்களில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி குறுக்கு வழியில் வரும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

    அதிகாரிகள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து உள்ளதால் விரைவில் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×