search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டுவில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
    X

    ஓட்டலில் உணவுபொருட்கள் ஆய்வு செய்யப்பட்ட காட்சி.

    வத்தலக்குண்டுவில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு :

    வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே உள்ள மீன் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது பழைய மீன்கள், கோழிக்கறி ஆகியவை மசாலா தடவி இரவு நேர விற்பனைக்கு குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருப்பதை உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கண்டறிந்தார்.

    இது போன்ற காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×