என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் யானைகள் சேதப்படுத்திய கடைகளை அதிகாரிகள் ஆய்வு
- மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது.
- சேதமடைந்த கடைகளை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் , துணைத் தலைவர் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
கொடை க்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இரண்டு நாட்களாக தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த கடைகள் மற்றும் சுற்றுலா பகுதியை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர் . மேலும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.