என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Officials meeting"
- 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
- 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி கேள்வி.
வடகிழக்கு பருவ மழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
ஆலோசனை கூட்டத்தில், "7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கண்டித்தார்.
மேலும் அவர், "கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும் ?" என கேள்வி எழுப்பினார்.
" ஆரம்பித்துவிட்டோம், முடிப்போன்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அனைத்து அமைச்சர்களும் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். மழை வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் எம்.பி., தயாநிதி மாறன் பேசுகையில், "சென்ட்ரல் ரெயில் நிலையம் பின்னால் இருக்கும் கல்யாணபுரம் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் பாதிக்கிறது. பல முறை சொல்லிவிட்டேன், பல அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த மழையின்போது எத்தனை புகார்கள் பெறப்பட்டன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? பணம் இல்லை, வேலை நடைபெறவில்லை என்று மக்களிடம் போய் சொல்ல முடியாது" என்றார்.
- மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது.
- 26 ஆயிரத்து 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, அரசு நியமித்த சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமை யில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மார்ச், 13 ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 213 மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 25 ஆயிரத்து, 664 மாணவர், 496 தனித்தேர்வர் உட்பட, 26 ஆயிரத்து, 160 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 92 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவது, அதற்காக பணிகள், முதன்மை, துறை கண்காணிப்பாளருக்கான ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவ லகத்தில் இன்று நடந்தது.
இதில் பொதுத்தேர்வு க்கான சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கஜலட்சுமி தலைமையில் மாவட்ட தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொது த்தேர்வை எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மூலம் ஹால்டிக்கெட் வழங்க ப்பட்டது.
- 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது.
- ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில், திருப்பூர் ஜம்மனை பள்ளம், சங்கிலிப் பள்ளம் ஆகிய பகுதிகளில் ஓடைப் புறம்போக்கில் வசித்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 1/2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. இதில் அவர்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப வீடுகள் அமைத்துக் கொண்டனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள 200 வீடுகளுக்கு, மின் இணைப்பு தர, மின் வாரியத்தினர் தடையில்லாச் சான்று வேண்டும் என்று கேட்பதாகவும் இது குறித்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை.
இதனால் உடனடியாக தடையில்லா சான்று வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக வந்த, அறிவொளி நகர் வார்டு உறுப்பினர் சையது ஒளி பானு மற்றும் பொதுமக்களிடம்,பல்லடம் தாசில்தார் நந்தகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கு உள்ள குடிசை மாற்று வாரிய பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மந்தை புறம்போக்கு நிலம் என்று ஆவணங்களில் உள்ள வீடுகளுக்கு கால்நடை துறை அதிகாரிகளுடன் வரும் 2-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தாசில்தார் தெரிவித்ததை அடுத்து சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், தண்ணீர்பந்தல் நடராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற துணை தலைவர் செல்லத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னப்பன்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்