search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ola Electric"

    • அறிவிப்பின் படி ரூ.30,000 வரையான பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • Ola S1 பிரிவின் மீது ரூ.25,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய பிரத்தியேக EV நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் விழாக்கால சீசனையொட்டி மிகப்பெரிய ஓலா சீசன் சேல் திட்டமான BOSS சலுகைகளின் ஒரு அங்கமாக ஒரு "72 மணிநேர ரஷ்" அறிவித்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் S1 பிரிவின் மீது ரூ.25,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் ரூ.30,000 வரையிலான கூடுதல் நன்மைகளை ஸ்கூட்டர்கள் மீதும் பெற முடியும். எனவே ஒரு மின்சார ஸ்கூட்டருக்கு மாறுவதற்கான சிறந்த நேரம் இப்போது வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை 31 அக்டோபர், 2024 வரை பெற்று மகிழலாம்.

     

     

    'BOSS' திட்டத்தின் கீழ் ஓலா நிறுவனம் பின்வரும் நன்மைகளை வழங்கும்:

    ●BOSS விலைகள்: ஓலா S1 பிரிவின் தொடக்க விலை வெறும் ரூ.74,999 மட்டுமே

    ●BOSS டிஸ்கவுன்டுகள்: ஒட்டுமொத்த பிரிவுக்கென ரூ.25,000 வரை தள்ளுபடி

    ●ரூ.30,000 வரையான BOSS கூடுதல் நன்மைகள்

    BOSS உத்தரவாதம்: இலவச 8-ஆண்டு/80,000 கிமீ, ரூ.7,000 மதிப்பிலான பேட்டரி உத்தரவாதம்

    BOSS ஃபைனான்ஸ் சலுகைகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்ட் EMIக்களின் மீது ரூ.5,000 வரையான ஃபைனான்ஸ் நன்மைகள்

    BOSS நன்மைகள்: ரூ.6,000 வரையான இலவச MoveOS+ மேம்படுத்தல்,ரூ.7,000 வரையான இலவச சார்ஜிங் கிரெடிட்டுகள்

    BOSS எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்: S1 பிரிவின் மீது ரூ.5,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்

    ஓலா எலெக்ட்ரிக் ஆனது ஆறு வகைகளுடன் கூடிய ஒரு பரந்த S1 பிரிவை கவர்ச்சிகரமான விலைகளில் வழங்குகிறது மற்றும் இவை பல்வேறு ரேஞ் தேவைகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

    பிரீமியம் வாகனங்களான S1 ப்ரோ மற்றும் S1 ஏர் ஆனவை முறையே ரூ.1,14,999 மற்றும் ரூ.1,07,499 என்ற விலைகளில் கிடைக்கும். அதே வேளையில் , வெகுஜன வாகனங்களான S1 X பிரிவு (2 kWh, 3 kWh, மற்றும் 4 kWh) முறையே ரூ.74,999, ரூ.77,999, மற்றும் ரூ.91,999, என்ற விலைகளில் கிடைக்கின்றன.

    அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் EV ஊடுருவலை அதிகரிப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய மற்றும் உரிமை அனுபவத்தை மேம்படுத்துவது என்ற தெளிவான நோக்கங்களுடன் ஓலா எலெக்ட்ரிக் கடந்த ஒருசில வாரங்களில் முன்னெடுப்புகளின் ஒரு தொடரை அறிவித்தது.

    தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும், பெஸ்ட்-இன்-கிளாஸ் விற்பனைக்கு பிந்தைய அனுபவத்தை வழங்கும் முனைப்புடன் நிறுவனமானது #HyperService விளம்பர முயற்சியை அதிரடியாக தொடங்கியது. இந்த முயற்சியின் ஒரு அங்கமாக நிறுவனமானது தனது நிறுவனத்துக்கு சொந்தமான சேவை நெட்வொர்க்கை டிசம்பர் 2024-க்குள் 1,000 மையங்கள் என்றளவில் இரட்டிப்பாக்கும்.

     


    கூடுதலாக, தன் நெட்வொர்க் பார்ட்னர் திட்டத்தின் ஒரு அங்கமாக நிறுவனமானது 10,000 பார்ட்னர்களை விற்பனை மற்றும் சேவை ஆகியவற்றின் முழுதும் 2025-ன் இறுதிக்குள் வரவேற்கும். மேலும் இந்நிறுவனம் இந்தியா முழுதுமுள்ள 1 லட்சம் மூன்றாம்-தரப்பு மெக்கானிக்குகள் EV பராமரிப்பில் திறன் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் EV செர்விஸ் பயிற்சி திட்டத்தையும் அறிவித்தது.

    ஆகஸ்ட் 2024 இல் தனது வருடாந்திர 'சங்கல்ப்' நிகழ்வில், Roadster X (2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh), Roadster (3.5 kWh, 4.5 kWh, 6 kWh) மற்றும் Roadster ஆகியவற்றை உள்ளடக்கிய Roadster புரோ (8 kWh, 16 kWh). மோட்டார்சைக்கிள் சீரிசை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்தது.

    மோட்டார்சைக்கிள்கள் பல பிரிவு-முதல் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்களை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் முறையே ரூ. 74,999, ரூ. 1,04,999 மற்றும் ரூ. 1,99,999 முதல் தொடங்குகின்றன.

    • விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும்.
    • இந்த ஸ்கூட்டரின் உண்மை விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி ஓலா S1 X மாடல் ரூ. 49 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைப்பு ஓலா S1 X 2 கிலோவாட் ஹவர் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     


    ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனையின் கீழ் இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

    • 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும்.
    • 1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தும்.

    பவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்டரிக் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் 5500 கோடி ரூபாய் மூலதனம் பெறுவதற்கான ஐபிஓ-க்கு செபி ஒப்புதல் வழங்கியது. செபியின் ஒப்புதலை பெறும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப் எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவாகும். இது 9.51 கோடி பங்குகளை கொண்டதாகும்.

    இதில் 4.7 கோடி ரூபாய் பங்குகளை பவிஸ் அகர்வாலால் விற்பனை செய்யப்படும். விளம்பர குரூப்பான இந்தூஸ் டிரஸ்ட் 41.78 லட்ச பங்குகளுக்கான உரிமையை வைத்துக்கொள்ளும்.

    1226.4 கோடி ரூபாய் துணை நிறுவனத்தின் மூலதன செலவினங்களுக்கும், 800 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தது.

    1600 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான முதலீடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ.350 கோடி இயற்கை வளர்ச்சி முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் விலை தொடர்பான மாடலின் விலையில் 12.5 சதவீதம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சில மாடல்களுக்கு ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், ஓலா S1 X மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 74 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் வாங்கிட முடியும். மேலும், பயனர்கள் தங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ. 40 ஆயிரம் வரை வழங்குகிறது.

     


    ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. ஓலா S1 X பிளஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை வழங்கப்படும்.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓலா S1 மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. 

    • இது ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • இந்த மாடலில் பல்வேறு வசதிகள் வழங்கப்படலாம்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களின் ப்ரோடோடைப் வெர்ஷனை ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில், தான் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் ஒன்றுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த பைக்கின் டிசைன் பார்க்க ரோட்ஸ்டர் கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இது ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

     


    இது தொடர்பான டிசைன் காப்புரிமைகளில் இந்த எலெக்ட்ரிக் பைக் க்ளிப் ஆன் ஹேண்டில்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் யு.எஸ்.டி. ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. இதில் டிஸ்க் பிரேக் இடதுபுறமாக வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த மாடலில் டி.எஃப்.டி., எல்.இ.டி. இலுமினேஷன், ரைட் மோட் என பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.  

    • வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய EMP திட்டம் காரணமாக மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பு காரணமாக ஓலா நிறுவனத்தின் S1 X 2 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 69 ஆயிரத்து 999 என குறைந்து இருக்கிறது. S1 X 3 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 999 என குறைந்துள்ளது.

     


    இந்த சீரிசில் டாப் எண்ட் S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 99 ஆயிரத்து 999 என குறைந்தது. ஓலா S1 X சீரிஸ் மாடல்களின் வினியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஓலா S1 X சீரிஸ் விலை குறைந்துள்ள நிலையில், S1 X பிளஸ், S1 ஏர் மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஓலா S1 X பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் S1 ஏர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், S1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • உலகின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
    • மக்களை முட்டாளாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளார். ஓலா சோலோ என்று அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விவரங்கள் எதையும் அறிவிக்காமல், அது தொடர்பான வீடியோவை பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் நேற்று (ஏப்ரல் 1) முட்டாள்கள் தினத்தன்று வெளியிட்டு இருந்தார். பலரும் இப்படி ஒரு வாகனம் சாத்தியமில்லை என்றும், இது மக்களை முட்டாளாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் கமெண்ட் செய்தனர்.

      


    இந்த நிலையில், நேற்றைய வீடியோ யாரையும் முட்டாளாக்குவதற்காக வெளியிடப்படவில்லை என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "இது முட்டாள்கள் தினத்துக்கான ஜோக் இல்லை! நேற்று நாங்கள் ஓலா சோலோ-வை அறிவித்தோம். அது வைரலானது, பலரும் அது உண்மைதானா அல்லது முட்டாள்கள் தின நகைச்சுவையா என்று விவாதித்தனர்."



    "அந்த வீடியோ மக்களை சிரிக்க வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டு என்றாலும், அதற்கு பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மேலும், அதற்கான ப்ரோடோடைப்களும் உள்ளன. இது எங்களின் பொறியியல் குழுக்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது."

    "எதிர்கால மொபிலிட்டி மற்றும் எங்களது பொறியியல் குழுக்கள் தானியங்கி, தானாக பேலன்ஸ் செய்து கொள்ளும் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இவற்றை எங்களது எதிர்கால வாகனங்களில் நீங்கள் பார்க்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் செல்லும்.
    • முன்னதாக ஒலா S சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், ஒலா S1 X மாடல்- ஃபன்க், ஸ்டெல்லார், ரெட் வெலாசிட்டி, வோக் மற்றும் மிட்நைட் என ஐந்து டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் அதிக பிரகாசமாகவும், சிங்கில் டோன் நிறங்களை விட அதிக வித்தியாசமாகவும் காட்சியளிக்கின்றன.

    நிறங்கள் தவிர ஒலா S1 X மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒலா S1 X மாடலில் 2.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    இதே ஸ்கூட்டர் 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 151 கிலோமீட்டர்கள் மற்றும் 190 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவை இம்மாத இறுதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் முன்பதிவுகளை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    • மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது s1 எக்ஸ் பிளஸ், s1 ஏர் மற்றும் s1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளது. இவற்றின் விலை அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி ஒலா s1 எக்ஸ் பிளஸ் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒலா s1 ஏர் விலை ரூ. 15 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஒலா s1 ப்ரோ விலை ரூ. 17 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என மாறி இருக்கிறது.

     


    விலை மாற்றம் தவிர இந்த ஸ்கூட்டர்களில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை. ஒலா s1 ப்ரோ மாடலில் 11 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    • மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X ஸ்கூட்டரின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷனில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா S1 X வெர்ஷனின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் வரை ஆகும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

     


    அதிக திறன் கொண்ட பேட்டரி காரணமாக இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு S1 X-ஐ விட 4 கிலோ அதிக எடை கொண்டிருக்கிறது. இவை தவிர மற்ற அம்சங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    புதிய வேரியண்ட் உடன் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒலா S1 சீரிசின் ஒட்டுமொத்த வேரியண்ட்களுக்கும் வாடிக்கையாளர்கள் வாரண்டியை நீட்டிக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் செலுத்தி 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட் வெலோசிட்டி. மிட்நைட், வோக், ஸ்டெல்லார், ஃபன்க், போர்சிலைன் வைட் மற்றும் லிக்விட் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தியது.
    • புது அப்டேட் மூலம் நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஒலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) முறையில் மூவ் ஒ.எஸ். 4 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இது வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை அடியோடு மாற்றும் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    புதிய மூவ் ஒ.எஸ். 4 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஒலா S1 ஜென் 1, மேம்பட்ட S1 ப்ரோ மற்றும் S1 ஏர் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலா S1 X பிளஸ் மாடல்களுக்கு வரும் மாதங்களில் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த அப்டேட் மூலம் நேவிகேஷன் வசதி இதற்கு முன்பு இருந்ததை விட அதிவேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒ.எஸ்.-இன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இகோ மோடில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய அப்டேட் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் உள்ள "கேர்" மோட் பயனர்களுக்கு காற்று மாசு அளவு குறித்த தகவல்கள் மற்றும் சேமிப்பு குறித்த விவரங்களை வழங்குகிறது.

    • நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
    • சிறப்பு சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜனவரி 15-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஓலா S1 X பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மற்றும் ஓலா S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ரூ. 6 ஆயிரத்து 999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

     


    இவைதவிர தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் வாகனம் வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, 7.99 சதவீத வட்டி போன்ற நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 X - S1 X (பேஸ்), S1 X (3 கிலோவாட் ஹவர்) மற்றும் S1 X பிளஸ் - S1 ஏர் மற்றும் S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    ஓலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்றும் S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×