search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ola Scooter"

    • ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு.
    • சர்வீஸ் மையத்திற்கு சென்றால் சரியாக ரிப்பேர் பார்த்து தரும் சேவையில் அதிருப்தி.

    ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அடிக்கடி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் சென்டர் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் குமுறல் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சர்வீஸ் சென்டர் முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு, ஷோ ரூம்-க்கே தீ வைப்பு போன்ற சம்பவங்கள் விரக்தியான வாடிக்கையாளர்களால் நடந்துள்ளன. பெங்களூரு பெண் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட் என பெரிய போர்டு தொங்கவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் சர்வீஸ் சென்டர்களில் ஓலா நிறுவனம் பவுன்சர்களை நிறுத்தியுள்ளதாகவும் பல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் Stand-up காமெடியன் குணால் கம்ராவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அந்த எக்ஸ் தள பதிவுகளை சுட்டிக்காட்டி குணால் கம்ரா ரீ-ட்வீட் ஓலா நிறுவனம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

    ஆர்.ஜே. காஷ்யப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஓலா தற்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் 5 முதல் 6 பவுன்சர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓலா சர்வீஸ் சென்டருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பவுன்சர்கள் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற சர்வீஸைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா, "தயவு செய்து செய்தியாளர்கள் இதுகுறித்து சரிபார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் உண்மையிலான தனித்துவமானது. விற்பனை குழு விற்பனைக்கான. விற்பனைக்குப் பிறகு பவுன்சர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பாருங்கள் குணால் கம்ரான் அமோல் சவுத்ரி என்பவர் 20-10-2004 அன்று ஓலா சர்வீஸ்க்காக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்தேன். ஸ்கூட்டரை ரிப்பேர் பார்ப்பதற்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. பவுன்சர்கள் மையத்தில் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனித்தனர் என்றார்.

    இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா "ஓலா நிறுவன உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து, இதுபோன்ற புதுமையான இந்தியா தயாரிப்பை விற்றுவிட்டீர்கள். ஊழியர்களை பாதுகாக்க பவுன்சர்சளை அமர்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

    குணால் கம்ரா முதன்முறையாக ஓலாவை விமர்சிக்கவில்லை. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் புகார் குறித்து வெளிப்படைதன்மை இல்லை, தற்போதைய வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு இல்லை என விமர்சித்திருந்தார்.

    • மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஓலா ஸ்கூட்டரின் புளுடூத் வசதி மூலம், மணமகள் தனது திருமணத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தனது திருமணத்தில் நடனமாட வேண்டும் என்ற மணமகளின் ஆசை நிறைவேறியது என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மணமகள் நடனமாட தயாரான போது திருமணம் நடக்கும் இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் வந்து ஸ்பீக்கரில் பாட்டு போடக்கூடாது என தடை போட்டுள்ளனர்.

    இதனால் மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் ஓலா ஸ்கூட்டரை மண்டபத்திற்குள் கொண்டு வந்து மேடைக்கு அருகில் நிறுத்தி ஸ்கூட்டரில் இருக்கும் ஸ்பீக்கருடன் புளுடூத் வாயிலாக இணைத்து பாட்டு போட்டனர். பின்னர் மணமகள் தனது ஆசைப்படி நடனமாடிய காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் தளத்தில் டேக் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×