search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old age death"

    • 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை.
    • அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்படமாட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி முப்பிடாதி என்ற ஏசம்மாள் (வயது113). இவர்களுக்கு 8 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    மேலும் மருமகள்கள், மருமன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன், பேத்திகள் என இவர்களின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் 68 பேர் ஆகும். இதில் பல்வேறு காரணங்களால் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 60 பேர் உள்ளனர்.

    முப்பிடாதி கடந்த 1910-ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், முப்பிடாதி தனது வாழ்நாளான 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. நோய்களுக்கு வென்னீர் குடிப்பது நெற்றியில் பத்து போடுவது என இயற்கை வைத்தியம் பார்த்துக்கொள்வார். அளவான நவதானிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். இவருக்கு ஆங்கில மருத்துவ முறையான அலோபதி என்றாலே என்ன வென்று தெரியாது.

    அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்பட மாட்டார். கணவரை இழந்தபிறகும் தனது குடும்பத்தினரால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது 113-வது பிறந்த நாளை நாங்கள் உற்சாகமாக கொண்டாடினோம். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

    • கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
    • தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கலையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 80) கூலித் தொழிலாளி, இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குச் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த குமார் (வயது40) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது கலைநல்லூர் சாலையில் சென்ற போது குமார் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அய்யாசாமி மற்றும் குமார் ஆகியோர் சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சம்பவ இடத்தில் இறந்து போனார். குமார் லேசான காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×