என் மலர்
நீங்கள் தேடியது "Old age scholarship"
- பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
- 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
காங்கயம் :
காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 125 போ் மனு அளித்தனா். இந்த மனுக்களில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.