என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old man killed"
- தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார்.
- விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
சென்னை தண்டை யார்பேட்டையை சேர்ந்த வர் ரத்தினம் (வயது 65). இவர் சென்னையில் உள்ள பாரில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் விக்கிரவாண்டியில் நடை பெற்ற தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார். வளைகாப்பு முடித்து மீண்டும் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக விக்கிர வாண்டி சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அந்த வழியாக வந்த ரெயில் மோதி அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.
ஈரோடு,
ஈரோடு அடுத்த காவிரி ரெயில் நிலையம்- ஆனங்கூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடந்த போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பிராவிடை யான் ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் குறித்து நாகை மாவட்டம் நாகூர் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் திரு.பட்டினத்தில் கேட்கீப்பராக தற்காலிகமாக வேலை பார்த்து வரும் ரத்தன்கு மாரை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதுபற்றி ரத்தன்குமார் திரு.பட்டினம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோடு மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை யில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவ ளத்தை கடந்த போது ரெயில் மோதி அந்த முதியவர் இறந்தது தெரிய வந்தது. இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. முதியவர் முகம் மற்றும் உடல் சிதைந்துள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாரஸ் லாரி துரைசாமி மீது திடீரென மோதியது.
- மருத்துவமனையில் டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சென்னிமலை:
காங்கேயம் யூனியன் திட்டம்பாளையத்தினை சேர்ந்தவர் துரைசாமி (61). இவர் திட்டம்பாளையத்தில் இருந்து காங்கேயம் - சென்னிமலை ரோட்டில் சென்னிமலை நோக்கி மொபட்டில் வந்தார்.
பசுவபட்டி பிரிவு அருகே ரோட்டை கடந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த பவானி, வரதநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே இவர், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
கடலூர்:
வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஞானம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமபந்தம மகள் தீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார்
- மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து போனார்,
கடலூர்:
காட்டுமன்னார்கோயில் அருகே கொண்ட சமுத்திரம் வீராகுடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 57). விவசாயக் கூலி தொழிலாளர். இவர் பணிசெய்யும் விளை நிலத்திற்கு இன்று காலை சென்றார். அங்கு விளைநிலத்தைச் சுற்றி மின்வேலி அமைக்கப் பட்டிருந்தது. இவர் விளைநிலத்தை சுற்றி வரும் போது நிலை தடுமாறி மின்வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேேய இறந்து கிடந்தார்.
அவ்வழியே சென்ற விவசாயிகள் இதனை பார்த்து நில உரிமையாளருக்கும் சோழவரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மின்வேலிக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு சுப்பிரமணி யனின் உடலை கைப்பற்றி னர். பிரேத பரிசோ தனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தனது பணிகளை முடித்து விட்டு விழுப்புரம்-செஞ்சி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார்.
- மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அதை ஓட்டிவந்த நபர் தப்பியோடி விட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது 68). இவர் நேற்று இரவு தனது பணிகளை முடித்து விட்டு விழுப்புரம்-செஞ்சி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மசூதி அருகே சென்ற போது, அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. தூக்கிவீசப்பட்ட முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அதை ஓட்டிவந்த நபர் தப்பியோடி விட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தருமாபுரி வழுதாவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாறன் (57). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இவருக்கும், இவரது சகோதரிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக மாறன் மீது அவரது சகோதரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மாறன் தனது சகோதரியிடம் சமாதானமாக செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது மாறனை அவரது சகோதரி வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.இதனால் மாறன் மன வேதனை அடைந்தார். இதுகுறித்து தனது மனைவி மற்றும் மகள்களிடம் கூறி மனம் வருத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மனஉளைச்சல் அதிகமாக இருந்ததால் மது அருந்திவிட்டு வருவதாக மாறன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.
அப்போது மாறன் மதுபானக்கடைக்கு 2 பேருடன் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, திடிரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மாறனுடன் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மாறனை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே தள்ளினர். கீழே விழுந்த மாறனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அவருடன் மது குடித்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து மதுக்கடை ஊழியர்கள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மாறன் மயங்கி கிடந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாறன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகள் மதனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்கடையில் மாறனுடன் அமர்ந்து மது அருந்திய 2 பேர் அவரது நண்பர்களா? அல்லது சொத்து தகராறில் சமாதானம் பேச வந்தவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
- சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியானார்.
- பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 70). இவர் லாலாபேட்டையில் இருந்து லா.கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லா.கூடலூர் காலனியை சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (19) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பெரியதம்பி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பெரியதம்பி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
- பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது.
கடலூர்:
சிதம்பரத்திலிருந்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அடை யாளம் தெரியாத முதியவர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.
இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியாகினர்.
- நடந்து சென்று கொண்டிருந்தார்
கரூர்
உப்பிடமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 85) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை உப்பிடமங்கலம் கடைவீதி ஜெகதாபி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரை சேர்ந்த பொண்ணு வேல் (வயது45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பெரியசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்