என் மலர்
நீங்கள் தேடியது "OLED"
- புதிய OLED மானிட்டர் 31.5 இன்ச் மற்றும் 27 இன்ச் என இரண்டு வெவ்வேறு திரை அளவுகளைக் கொண்டுவருகிறது.
- எல்ஜியின் புதிய அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ப்ரோ மானிட்டர்களின் ஆரம்ப விலை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 ரூபாயாம்.
எல்.ஜி.யின் OLED பேனல்கள் சந்தையில் சிறந்த படத் தரத்தை வழங்குகின்றன. தற்போது அந்நிறுவனம் உயர்தர OLED டிஸ்ப்ளேக்களுடன் கூடிய இரண்டு புதிய மானிட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இரண்டு திரை அளவுகளில் வெளியிடப்பட்ட, எல்ஜியின் புதிய அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ப்ரோ மானிட்டர்களின் ஆரம்ப விலை 1 லட்சத்து 99 ஆயிரத்து 999 ரூபாயாம்.
புதிய OLED மானிட்டர் 31.5 இன்ச் மற்றும் 27 இன்ச் என இரண்டு வெவ்வேறு திரை அளவுகளைக் கொண்டுவருகிறது. இரண்டுமே சிறந்த 1M: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ கொண்ட 4K OLED மானிட்டர்கள். அல்ட்ராஃபைன் OLED ப்ரோ மானிட்டர்கள் ஒவ்வொரு பிக்சலையும் சரிசெய்யும்போதும் துல்லியமான படங்களை வழங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.

எல்ஜி அல்ட்ராஃபைன் டிஸ்ப்ளே OLED ஆனது USB டைப்-சி (90W வரை பவர் டெலிவரி), 2 x டிஸ்ப்ளே போர்ட்கள், 3 x USB போர்ட்கள் மற்றும் இணைப்பிற்காக HDMI போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.