என் மலர்
நீங்கள் தேடியது "One Stop Centre"
- பெண்களுக்கான மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவிகள் வழங்குவதற்கு ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படுகிறது.
- கிளை மையம் துவங்குவதற்கு உடுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை :
பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவிகள் வழங்குவதற்கு 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படுகிறது.
மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கிளை மையம் துவங்குவதற்கு உடுமலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மையம் அமைப்பதற்கு தகுதியான இடங்கள் ஆய்வு செய்யப்படுவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.