என் மலர்
நீங்கள் தேடியது "Online App"
- ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
- கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெணுமூரூ, அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராம். (வயது 30). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஜானகிராம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். ஆன்லைன் விளையாட்டுக்காக தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கினார்.
மேலும் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். ஆன்லைனில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டுமென ஜானகிராமுக்கு நெருக்கடி அதிகரித்து வந்தது.
மேலும் கடன் கொடுத்தவர்கள் மிரட்டத் தொடங்கினர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜானகிராம் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானகிராம் உடலை மீட்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதத்தை பறிமுதல் செய்தனர்.
அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை அம்மா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சமூக வலைதளங்கள் மூலம் பல சாதகமான விஷயங்கள் நடந்தாலும், உயிருக்கு பாதகமான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் மாஸ்கோ பயணித்துள்ளான். 6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.
சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் ஏற்பட்ட நட்பு இரண்டு சிறுவர்களின் வாழ்வை சூறையாடியிருப்பது சற்றே சிந்திக்க வைக்கிறது. #Russia #SocialMediaKills