search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Ordering"

    • மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
    • இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    சென்னை:

    கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    விளையாட சென்ற மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும் சக மாணவ-மாணவிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார்.
    • ஆர்டர் நிலை ‘இன்று வந்து சேர்ந்துவிடும்’ என்று காட்டி உள்ளது.

    ஆன்-லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வினியோகம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்-லைன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைந்து சேவையை வழங்கி வருகின்றனர்.

    ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு வாலிபர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையை சேர்ந்த ஆஹ்சன் கர்பாய் என்ற வாலிபர் பிளிப்கார்டில் ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் ஸ்லிப்பர்களை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார். ஆனால் அவை உடனடியாக வினியோகம் செய்யப்படவில்லை.

    பல ஆண்டுகளாக அவரது ஆர்டர் நிலை 'இன்று வந்து சேர்ந்துவிடும்' என்று காட்டி உள்ளது. ஆனால் அந்த நிலை மட்டும் மாறாமலேயே இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் திடீரென பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த ரூ.485 மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பு வினியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

    அதன்படி அவருக்கு அந்த ஆர்டர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தனது அனுபவத்தை அவர் எக்ஸ் தளத்தில் தனது ஆர்டரின் வரலாற்றுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார்.

    அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    ×