என் மலர்
நீங்கள் தேடியது "OpenAI"
- தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.
ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார்.
- எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
- ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.
2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.
"ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
- ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.
இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்த காரின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
- எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும்?
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி ஆல்ட்மேன் கோனிக்செக் ரெகரா ஹைப்பர் கார் மாடலை ஓட்டுகிறார்.
இது லிமிட்டெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோனிக்செக் ரெகரா உலகளவில் மொத்தம் 80 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இது ஒரு ஹைப்ரிட் ரக கார் ஆகும். இதன் ஆரம்ப விலையே 1.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 16 கோடி ஆகும்.
இந்த காரை பயன்படுத்திய நிலையில் வாங்கும் போது விலை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், இதன் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி ஆகும்.
ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் ரெகரா மாடலை ஓட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியால் எப்படி இத்தனை விலை மதிப்புள்ள காரை வாங்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவு ஒன்றில், "ஓபன்ஏஐ சிஇஓ உலகின் விலை உயர்ந்த காரை ஓட்டி வருகிறார். லாப நோக்கற்ற நிறுவனமாக துவங்கப்பட்ட ஓபன்ஏஐ எப்படி லாபகர வியாபாரமாக மாறியது?" என கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் "நல்ல கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கவும், அதில் அதிக கவனம் செலுத்துவதிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டினர். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஓபன்ஏஐ. பிறகு, அந்நிறுவன நிர்வாக குழுவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் இதர காரணங்களால் எலான் மஸ்க் ஓபன்ஏஐ-இல் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.