என் மலர்
நீங்கள் தேடியது "owners condemned"
- புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க ஆேலாசனை கூட்டம் வள்ளலார் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் இசைக்கலைவன் தலைமை தாங்கினார்.
- மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க ஆேலாசனை கூட்டம் வள்ளலார் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் இசைக்கலைவன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் புதுவை மாநிலத்தை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர்.
இதில், புதுவையில் குப்பை வரியை குறைத்ததற்கும், கழிவுநீர் வாய்க்கால் வரியை குறைக்க நடவடிக்கை எடுத்ததற்கும், வணிகர்களின் வியாபார வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருமண மண்டப உரிமையாளர்களின் தொழில் பாதிக்கும் வகையில் மண்டபங்களில் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருக்கும் கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள் மணி, ராஜேந்திரன், பொருளாளர் மண்ணாங்கட்டி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.