என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oxygen plant"

    • அரசு மருத்துவமனையில் ரூ.1.27 கோடியில் ஆக்சிஜன் பிளாண்ட்டை கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார்.
    • தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ மனைக்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஏற்பாட்டில் டாடா குழுமத்தின் டி.சி.எஸ். பவுண்டேசன் மூலம் சுமார் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 500 லிட்டர் கொள்ளவில் ஒரே நேரத்தில் 100 ேபருக்கு ஆக்சிஜன் வழங்கும் வகையில் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார். காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார்.

    பின்னர் எம்.பி. பேசுகையில், டாடா குழுமத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிளாண்ட். மேலும் அதிக செலவிலான ஆக்சிஜன் பிளாண்டை சரியான முறையில் பராமரிப்பு செய்து பயன்படுத்த வேண்டும். மருத்துவ மனையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.

    சுகாதார துறை இணை இயக்குநர் தர்மர் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் பால முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சபாபதி, தேவகோட்டை நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய், காங்கிரஸ் மாநில இலக்கிய அணிச் செயலாளர் சுவாமிநாதன், வட்டார காங்கிரஸ் இளங்குடி முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமை மருத்துவர் செங்கதிர் நன்றி கூறினார்.

    ×