என் மலர்
நீங்கள் தேடியது "paddy field"
- பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிப்பு.
- விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் பாதிப்பு.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மத்திய மந்திரி குமாரசாமி சீதாபுரா கிராமத்தில் நாற்று நட்டார்.
- முன்னதாக அவர் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார்.
மாண்டியா:
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில் மத்திய மந்திரி குமாரசாமி இன்று நாற்று நட்டார்.
காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்.
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.