என் மலர்
நீங்கள் தேடியது "pakistan army"
- பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
- அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.
விசாரணையில், துப்பாக்கி சண்டையில் பலியான பயங்கரவாதிகள் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
- பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார்.
- ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என கூறினார்.
லாகூர்:
பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆசிம் முனீர் முதல் முறையாக இந்தியாவுடனான எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார்.
இந்நிலையில், ரக்ஷிக்ரி பகுதி இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார். அதன் பின் ஆசிம் முனீர் பேசியதாவது:
கில்கித் பல்கிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எங்கள்மீது போர் திணிக்கப்பட்டால் தாய்நாட்டின் ஒவ்வொரு இன்ச் பகுதியையும் பாதுகாக்க மட்டுமின்றி எதிரிகளை எதிர்த்துப் போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
- உயர்அதிகாரிகள் பணியாற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
- ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் பணிபுரியும் வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பல இடங்களில் பதுங்கி கொண்டனர்.
தகவல் அறிந்ததும் ராணுவத்தினர் துறைமுகத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துறைமுகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கூறும்போது, குவாடர் துறைமுக ஆணைய வளாகத்தில் 8 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வன்முறையை பயன்படுத்த விரும்பும் யாரும் அரசின் கருணையை பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக துணிச்சலுடன் போராடிய அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதற்கிடையே தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளிடம் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இந்த இயக்கம், பலுசிஸ்தானில் சீனாவின் முதலீடுகளை எதிர்த்து வருகிறது.
வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம்சாட்டி வருகிறது. அந்த இயக்கத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் செயல்படும் குவாடர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
- இந்த வன்முறையில் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பொருட்படுத்தாத இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 4,000 பேரை போலீசார் கைதுசெய்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இம்ரான்கான் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
- இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தகவல் தெரியவவில்லை. இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 2021 பிப்ரவரியில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்தன. இதன் பின்னர் போர்நிறுத்த மீறல் நடைபெறுவது வெகுவாக குறைந்தது
சில நாட்களுக்கு முன்பு ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒரு கேப்டன் உட்பட இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire

