search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Super League 2019"

    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் தான் விளையாட இருப்பதாக தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #psl #ABDVilliers
    ஐபிஎல், பிக் பாஷ், கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடர் நடைபெறுவதுபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ல் இருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் 2019 சீசனில் விளையாட இருப்பதாக டுவிட்டர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

    ஏபி டி வில்லியர்ஸை வரவேற்கிறது என்று பாகிஸ்தான் சூப்பர் லீக் பதில் தெரிவித்துள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×