என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pakistan supreme court"
- உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது
- தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நாம் முன்னேற முடியாது என்றார் தலைமை நீதிபதி
பாகிஸ்தானில், 1971லிருந்து 1973 வரை அதிபராகவும், 1973லிருந்து 1977 வரை பிரதமராகவும் இருந்தவர் சுல்ஃபிகர் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto).
1977ல் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை பதவியில் இருந்து ராணுவ புரட்சி மூலம் தூக்கி எறிந்து பதவிக்கு வந்தார் ஜெனரல் ஜியா-உல் ஹக் (General Zia-ul-Haq).
1979ல் ஜியாவின் ஆட்சியின் போது, அகமது ரெசா கசூரி (Ahmed Reza Kasuri) என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சுல்ஃபிகர் அலி பூட்டோவிற்கு மரண தண்டனை விதித்தது.
ராவல்பிண்டியில் சுல்ஃபிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என வழக்கு தொடரப்பட்டு பல வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், "சுல்பிகர் அலி பூட்டோவின் வழக்கு நியாயமான முறையில் நடக்கவில்லை" என தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா (Qazi Faez Isa) தலைமையிலான 9-நபர் பெஞ்ச் அளித்துள்ள இந்த தீர்ப்பில், "லாகூர் உயர் நீதிமன்றமும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் முறையான விசாரணை பெற ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை பூட்டோவிற்கு வழங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நமது முந்தைய தவறுகளை ஒப்பு கொள்ளா விட்டால் நம்மை திருத்தி கொண்டு நாம் முன்னேற முடியாது" என கூறியுள்ளது.
More than 44 years after judicial murder and more than 12 years after presidential reference was filed; today a unanimous decision announce by CJP Isa. Shaheed Zulfikar Ali Bhutto did not get a fair trial. The pursuit of justice was a labour of love by President Asif Ali Zardari… https://t.co/rTNgLWeood
— BilawalBhuttoZardari (@BBhuttoZardari) March 6, 2024
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சுல்ஃபிகர் அலி பூட்டோவின் பேரனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party) தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி (Bilawal Bhutto-Zardari), "3 தலைமுறைகளாக இந்த தீர்ப்பிற்காக காத்திருந்தோம்" என கூறினார்.
- தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது
- கேபி (KP) பிராந்திய பயங்கரவாதமும் தீர்மானத்தில் காரணமாக கூறப்பட்டுள்ளது
2024 பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தான் பாராளுமன்ற 16-வது தேசிய அசெம்பிளிக்கான 342 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் உறுப்பினர்கள், தேர்தலை ஒத்தி வைக்குமாறு இரண்டு முறை தீர்மானம் கொண்டு வந்தனர்.
நேற்று, தேர்தலை தள்ளி வைக்குமாறு 3-வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஹிலாலுர் ரெஹ்மான் எனும் சுயேச்சை உறுப்பினர் கொண்டு வந்த இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதாவது:
கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரால் மக்களால் தங்கள் ஜனநாயக கடமையை இயற்ற முடியாமல் போகலாம். மேலும், கைபர்-பக்துங்க்வா (Khyber-Pakhtunkhwa) பிராந்தியத்தில் நடைபெறும் தொடர் பயங்கரவாத தாக்குதல்கள், அப்பகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) பிப்ரவரி 8 தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சம்பந்தபட்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு காலகட்டத்தில் தேர்தலை நடத்துவது நல்லது.
இவ்வாறு அந்த தீர்மானம் கூறுகிறது.
2018ல் தேர்வான பாராளுமன்றத்தின் பதவிக்காலம், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது.
அதை தொடர்ந்து, கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்டது.
அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனையில் தலையிட்டது.
இறுதியாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், பிப்ரவரி 8 அன்று தேர்தல் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.
தற்போது 3-வது முறையாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் என்ன இறுதி முடிவை எடுக்க போகிறது என அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.
- கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதன்படி இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணமாக, 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
- இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
- நாளை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தலைமை நீதிபதி பந்தியால் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும். உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார்.
இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டன.
- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
- இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்து சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதனால் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47), உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், ஆசியா பீவி பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் எப்போது நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார்? எங்கு சென்றார்? என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் அவர் கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
ஆசியா பீவி ஏற்கனவே கனடாவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், கனடாவில் அவரது மகள்களுடன் சேர்ந்துவிட்டதாகவும் ஆசியா பீவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆசியாவுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆசியா பீவி பாகிஸ்தானை விட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்வரை, அவரை யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் வைத்துள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் கிசார் ஹயாத் என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தன்னுடன் பணியாற்றிய சகப்போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டதாக கிசார் ஹயாத் கைது செய்யப்பட்டார். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கடந்த 2008-ம் ஆண்டு தீவிரமான மனநோயாளியாக மாறிய கிசார் ஹயாத்துக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கிசார் ஹயாத்தின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இதற்கிடையில், 15-1-2019 அன்று காலை அவரை தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.
லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சென்று பார்வையிட வேண்டும். அங்குள்ள மனநல மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த கிசார் ஹயாத்தின் தாயார் மனுமீது நாளை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளது.
கிசார் ஹயாத்தின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணையும் நாளை நடைபெறுகிறது. #Pakistanchiefjustice #staysexecution #mentallyill #mentallyillpoliceman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்