search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan team management"

    • பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர்.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    கராச்சி:

    சமீபத்தில் உள்நாட்டில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் தோற்றது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறுகையில், 'சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் சொந்த மண்ணில் நடக்கும் தொடரை வெல்ல முடியாது. கடந்த 3-4 ஆண்டுகளாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரியம் சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் பொறுமையாக இருப்பதில்லை.

    பாபர் அசாம் கேப்டனாக இருந்த போது அணியில் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போதும், சுழற்பந்து வீச்சாளர்களால் தான் அங்கு டெஸ்ட் போட்டிகளை வென்றோம். கடந்த காலத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் போல் வலிமையான வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது இல்லை.

    இருப்பினும் அவர்கள் தொடரை கைப்பற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த வாரம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரே அதற்கு சான்று' என்றார்.

    ×