என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan"

    • பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து எஸ்.வி.இ.எஸ். விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சண்டிகர்:

    பஹல்காமில் பாகிஸ் தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதோடு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    இதுதவிர 'சார்க்' கூட்ட மைப்பு நாடுகளுக்கான நுழைவு இசைவுத் திட்டத்தின் கீழ் (எஸ்.வி.இ.எஸ்.) பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து எஸ்.வி.இ.எஸ். விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


    அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்பட்டது. இந்த எல்லை வழியாக உரிய அனுமதியுடன் இந்தி யாவுக்குள் நுைழந்த பாகிஸ்தானியர்கள் வரும் மே 1-ந்தேதிக்குள் இதே எல்லை வழியாகத் திரும்பு வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள் ளப்பட்டதாக வெளியுற வுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்திருந்த பாகிஸ்தானி யர்கள் சிலர் அட்டாரி-வாகா எல்லையை நேற்று (வியாழக்கிழமை) வந்தடைந்தனர். அங்கிருந்து நிலப்பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு திருப்பிச் செல்லத் தொடங்கினர்.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி, ஹுசைனி வாலா (பெரோஸ்பூர் மாவட்டம்) மற்றும் சாத்கி (அபோகர் மாவட்டம்) ஆகிய எல்லைகளில் நடை பெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் ராணுவ கமாண்டருடன் கைகுலுக் கும் நடைமுறையை நிறுத்து வதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தெரிவித்தது.

    மேலும் நிகழ்ச்சியின் போது எல்லையில் உள்ள கதவுகள் இனி மூடப்படுகிறது.

    • பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமர் பேச்சு.

    ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் பேசியுள்ளார்.

    அப்போது அவர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

    இதுகுறத்து அவர் மேலும் கூறுகையில்," நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்றார்.

    • இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    • பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு ஏற்கனவே இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    • போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலையில் உள்ளனர். எல்லையில் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு தமது முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

    • பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இன்று இந்தியா நிறுத்தியது.
    • சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதன் எதிரோலியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.

    இந்நிலையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
    • எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.

    இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.

    பரஸ்பரம் எல்லை மூடப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.

    மேலும், இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

    3வது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உள்பட நிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    • சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்பது சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
    • மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் (Indus Water Treaty) என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமாகும்.

    இது அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அயூப் கான் ஆகியோரால் பாகிஸ்தானின் கராச்சியில் உருவாக்கப்பட்டது. உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் கெயெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டி பல நதிகள் ஓடுகிறது என்பதால், அவற்றின் நீரைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையேயான ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான வழிமுறை இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் வகுத்தது எனலாம். மொத்தம் 6 நதிகளை இரு நாடுகளும் பொதுவாக நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

    கிழக்கு நதிகள் மூன்று, மேற்கு நதிகள் மூன்றாகும். அதில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ரவி ஆகியவற்றின அனைத்தை நீரையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இந்தியாவின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மூன்று போர்கள், கார்கில் மோதல், மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் இருந்தாலும், இது ஒரு வெற்றிகரமான ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.

    இந்த நிலையில் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    இந்த நடவடிக்கை மூலம் சிந்து நதியின் நீர் பாகிஸ்தானுக்கு பாய்வதை இந்தியா நிறுத்தும். சிந்து நதி பாகிஸ்தானின் பல மாகாணங்கள் வழியாக அரபிக்கடல் வரை பாய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய தாக்கம் பாகிஸ்தானின் விவசாயத்தில் இருக்கும்.

    210 மில்லியனுக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்களின் தண்ணீர் தேவைகளும் இந்த சிந்து நதி நீர் அமைப்பைச் சார்ந்துள்ளது. அது நிறுத்தப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    • முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. 

    • 2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும்.
    • சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.

    இந்நிலையில் பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

    • நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.
    • லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லைவ் 93 செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.

    ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.  

    • அதிகபட்சமாக சவுதி அரேபியாவுக்கு 1,21,190 பேர் சென்றுள்ளனர். ஓமனுக்கு 8,331 பேர் சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 6,891 பேர் சென்றுள்ளனர்.
    • 849 டாக்டர்களும், 1,479 இன்ஜினீயர்களும் சென்றுள்ளனர். 390 செவிலியர்கள், 436 ஆசிரியர்களும் அடங்குவர்.

    பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள், நல்ல வேலைவாய்ப்புகளை தேடி வெளிநாடு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடந்த மூன்று மாதங்களில் 1.72 லட்சம் பேர் பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக அந்நாட்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் தனிநபர் பிரிவில் பொதுவான வேலைகள் என்ற பிரிவில் சென்றுள்ளனர்.

    அதிகபட்சமாக சவுதி அரேபியாவுக்கு 1,21,190 பேர் சென்றுள்ளனர். ஓமனுக்கு 8,331 பேர் சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 6,891 பேர் சென்றுள்ளனர்.

    பிரிட்டனுக்கு 1,454 பேரும், துருக்கி நாட்டிற்கு 870 பேரும் சென்றுள்ளனர். மேலும் கிரீஸ் (815), மலேசியா (775), சீனா (592) அஜர்பைஜான் (350), ஜெர்மனி (264), அமெரிக்கா (257), இத்தாலி (109), ஜப்பான் (108) நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

    பொது வேலை என்ற பிரிவில் 99,139 தனி நபர்கள் சென்றுள்ளனர். 38,274 டிரைவர்கள், 1,859 கொத்தனார்கள், 2,130 எலக்ட்ரீசியன்ஸ், 1,689 சமையல்காரர்கள், 3,474 டெக்னீசியன்ஸ், 1058 வெல்டர்கள் ஆவார்கள்.

    849 டாக்டர்களும், 1,479 இன்ஜினீயர்களும் சென்றுள்ளனர். 390 செவிலியர்கள், 436 ஆசிரியர்களும் அடங்குவர்.

    • இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
    • இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன்.

    தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (வயது 35).

    இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.

    கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    ×