என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Pakistani Christian woman
நீங்கள் தேடியது "Pakistani Christian woman"
தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கனடாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
ஒட்டாவா:
பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி. இவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த அவர் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதற்கு எதிர்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
எனவே, இங்கிலாந்து, கனடா, இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆசியா பீபீயின் கணவர் ஆசிக்மாசிக் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் பாரீசில் நடந்த முதல் உலகப்போர் 100 ஆண்டு நிறைவு விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூ கலந்துகொண்டார். அவரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறினார். இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை.
அதேநேரத்தில் கனடா மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ஆசியா பீபியும் அவரது குடும்பத்தினரும் கனடாவில் தஞ்சம் அடைய இருப்பதை அந்நாட்டு பிரதமர் டிருடீயோ சூசகமாக தெரிவித்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுதுறை மந்திரி ஷா முகமது குரேசியுடன் கனடா வெளியுறவு மந்திரி இதுகுறித்து பேசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திரி குரேஷி கூறும்போது, ஆசியா பீபி எங்கள் நாட்டு பிரஜை. அவருக்குரிய சட்டப்பூர்வ உரிமைகள் முழுவதையும் பாகிஸ்தான் வழங்கும் என்றார். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy

×
X