என் மலர்
நீங்கள் தேடியது "PAKvNZ"
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்கள் எடுத்தது.
- 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னில் அவுட்டானார். டாம் பிளெண்டல் அரைசதம் அடித்து 51 ரன்னில் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும் , நசீம் ஷா, ஆகா சல்மான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் 20 ரன்களுக்கும், பாபர் அசாம் 24 ரன்களில் ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய இமாம் உல் ஹக் அரைசதம் அடித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 74ரன்களும், சவுத் ஷகீல் 13 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
- நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 277 ரன்னில் டிக்ளேர் செய்தது.
- பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. டேவன் கான்வே சதமடித்து 122 ரன்னில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 71 ரன்னிலும், டாம் பிளெண்டல் 51 ரன்னிலும் அவுட்டாகினர். மாட் ஹென்றி 68 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாம் உல் ஹக் 83 ரன்னும், சர்ப்ராஸ் கான் 78 ரன்னும் எடுத்தார். பொறுப்புடன் ஆடிய ஷகீல் சதமடித்தார். அவர் 125 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. டாம் பிளெண்டல் 74 ரன்னும், டாம் லாதம் 62 ரன்னும் எடுத்து வெளியேறினார். பிரேஸ்வெல் 74 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் அப்துல்லா ஷபீக் , மிர் ஹம்சா டக் அவுட்டாகினர். 4-வது நாள் முடிவில் பாகிஸ்தான் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இறுதி நாளான இன்று பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் தேவை. நியூசிலாந்து வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவை.
- சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.
- பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
கராச்சி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 41 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 277 ரன்னில் டிக்ளேர் செய்தது. இதனால் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கேப்டன் பாபர் ஆசம் 27 ரன்களும், ஷான் மசூத் 35 ரன்களும் அடித்தனர். சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்ரேட்டை உயர்த்தியது.
சவுத் ஷகீல் 146 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அகா சல்மான் 30 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் அகமது சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் அகமது 118 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287 ஆக இருந்தது. ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.
ஆனால், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதன்மூலம் இப்போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்ததால், இத்தொடர் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக ஆடியதுடன், இரண்டாவது போட்டியில் சதம் அடித்த சர்பராஸ் அகமது, பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பற்றியதன் காரணமாக இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 255 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 5-0 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்தது. பிரேஸ்வெல் 43 ரன்னிலும், டாம் லதாம் 42 ரன்னிலும், பிலிப்ஸ் 37 ரன்னிலும், டேரில் மிட்செல் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 5 விக்கெட்டும், உசாமா மிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 56 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்னும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
5 விக்கெட் வீழ்த்திய நசீம் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார்.
- 43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் சுருண்டது.
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 261 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவன் கான்வே 101 ரன்கள் குவித்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட் கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர் பகார் ஜமான் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் இமாம் உல் ஹக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
3வது வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசம், அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியில் அரை சதம் கடந்த அவர் தொடர்ந்து முன்னேறினார். ஆனால், முறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலக்கை எட்ட முடியவில்லை. பாபர் ஆசம் 79 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
43 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 182 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, இஷ் சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர். தேவன் கான்வே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 13ம் தேதி நடக்கிறது.
- பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.
கராச்சி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சதமடித்து 101 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 77 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகா சல்மான் 45 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேவன் கான்வே, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கான்வே 52 ரன்னிலும், வில்லியம்சன் 53 ரன்னிலும் வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியூசிலாந்து திணறியது.
கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் போராடினார். அவர் அதிரடியாக ஆடினார். 42 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கும், தொடர் நாயகன் விருது டேவன் கான்வேக்கு வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்னில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 84 ரன்னில் சுருண்டு தோற்றது.
லாகூர்:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய சயிம் அயூப் 28 பந்தில் 47 ரன்னும், பகர் சமான் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஹீம் அஷ்ரப் 22 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டும், மில்னே, பென் லிஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி நியூசிலாந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அந்த அணியின் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 34 ரன்களும், டாம் லாதம் 20 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஹரிஸ் ராபுக்கு அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.
- கேப்டன் பாபர் ஆசம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன் எடுத்தார்.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), முகமது ரிஸ்வான் 34 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) இப்திகார் அகமது 19 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
தொடர்ந்து, விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க் சேப்மேன் அதிகபட்சமாக 40 பந்தில் 65 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நாளை நடக்கிறது.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது.
- கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன் எடுத்தார்.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி லாகூரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன்னும், டேரில் மிட்செல் 33 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இப்திகார் அகமது, பஹீம் அஷ்ரப் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
இப்திகார் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 24 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். இதனால் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் நீஷம் 4 விக்கெட்டும், மில்னே, ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் உள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
- முதல் மற்றும் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி நேற்று இரவு ராவல்பிண்டியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. சிறுது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
hailstorm in Pindi ? just wow #Pakvnz #ShahidSelfie #Rain #pakvnz pic.twitter.com/Mdwx8GfAPC
— shahid Selfie (@ShahidSelfie) April 20, 2023
தொடர்ந்து மழை பெய்ததால் அந்த ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 24-ந் தேதி ராவல்பிண்டியில் நடக்கிறது.
முதல் மற்றும் 2-வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் நியூசிலாந்து வென்றது. கடைசி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். நியூசிலாந்து வென்றால் தொடரை சமன் செய்யும்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 98 ரன்கள் எடுத்தார்.
ராவல்பிண்டி:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தானும், 3வது போட்டி முடிவில்லாமலும், 4வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 98 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இப்திகார் அகமது 36 ரன்னும், இமாத் வாசிம் 31 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிக்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து திணறியது.
அடுத்து இறங்கிய சாப்மேன் அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நீஷம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-2 என சமன் செய்தது நியூசிலாந்து அணி.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சாப்மேனுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 288 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 291 ரன்கள் எடுத்து வென்றது.
ராவல்பிண்டி:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.