என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PAKvSL"
- இந்த போட்டியில் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டன
- இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தனர்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இலங்கை 344 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் எளிதாக சேஸிங் செய்தது.
இந்த போட்டி பல்வேறு சாதனைகளை கண்டுள்ளது. அதனைப் பார்ப்போம்
1. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் (131 நாட்அவுட்) படைத்துள்ளார்.
2. உலக கோப்பையில் சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்
3. இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்கள் என 4 பேர் சதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களை கண்ட போட்டி என்ற சாதனையில் இணைந்துள்ளது. இலங்கையில் குசால் மெண்டிஸ் (122), சமரவிக்ரமா (108) ஆகியோரும் பாகிஸ்தானில் அப்துல்லா ஷபிக் (113), முகமது ரிஸ்வான் (131) ஆகியோரும் சதம் அடித்தனர்.
4. இலங்கை அணிக்கெதிராக தோல்வியை சந்திக்காமல் அதிக வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. 8 முறை உலக கோப்பையில் இலங்கையில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான்
5. இரு அணிகளிலும் 4-வது வீரர் சதம் அடிப்பது இது ஐந்தாவது முறையாகும். சமர விக்கரமா 108 ரன்களும், ரிஸ்வான் 131 ரன்களும் அடித்தனர்.
6. உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
7. இரு அணியின் விக்கெட் கீப்பர்களும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது
- இலங்கை அணி 344 ரன்கள் குவித்திருந்தது
- 48.2 ஓவரிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தான் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி 344 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
345 இலக்கை எட்டியதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் இலக்கை எட்டிப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2011-ல் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து 328 ரன்களை எட்டிப்பிடித்தது.
2019-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக வங்காளதேசம் 322 ரன்களை எட்டிப்பிடித்துள்ளது. 2015-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக வங்காளதேசம் 319 ரன்களையும், 1992-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக இலங்கை 313 ரன்களையும் எட்டிப்பிடித்துள்ளது.
- முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது
- பாகிஸ்தான் 2-வது வெற்றியை பெறும் வகையில் விளையாடும்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதேவேளையில் வங்காளதேசம் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்க நினைக்கும். இந்த போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது.
இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதே மைதானம் என்பதால் வங்காளதேசத்திற்கு சற்று கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கும்.
மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. அதே உற்சாகத்துடன் இன்று இலங்கையை வீழ்த்த துடிக்கும்.
இலங்கை அணி முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தாலும், இலங்கை 44.5 ஓவர்களில் 326 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த போட்டி பரபரப்பு, சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- இலங்கை முதல் இன்னிங்சில் 312, 2-வது இன்னிங்சில் 279
- பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 461 ரன்கள் குவித்தது
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 312 ரன்னும், பாகிஸ்தான் 461 ரன்னும் எடுத்தன.
149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 279 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 131 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முதலில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது. இமாம்-உல்-ஹக் (25 ரன்) கேப்டன் பாபர் ஆசம் (6 ரன்) களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் ஆசம் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷாகீல் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இமாம்-உல்-ஹாக் அரைசதம் அடித்து நிலைத்து நிற்க பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதனால் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் கொழும்பில் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
- நியூசிலாந்து தொடரில் சர்பராஸ் சதம் விளாசியதோடு தொடர் நாயகன் விருதை வென்றார்
- இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக் கேப்டனாக ரிஸ்வான் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது முகமது ரிஸ்வான் துணைக்கேப்டனாக இருந்தார். அவர் மோசமாக விளையாடியதன் காரணமாக நீக்கப்பட்டு, அனுபவ வீரரான முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டார்.
பாகிஸ்தான் அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சுமார் ஒரு வருடம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி அணியில் இணைந்துள்ளார்.
முகமது ரிஸ்வான் அணியில் சேர்க்கப்பட்டதோடு, துணைக்கேப்டன் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு துணைக்கேப்டன் வழங்கப்பட்டது நியாயமானது அல்லது என்று முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் லத்தீப் கூறியிருப்பதாவது:-
இலங்கை தொடருக்கு சர்பராஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான திறன் அவரிடம் உள்ளது. ரிஸ்வான் ஃபார்ம் இன்றி தவிக்கும்போது சர்பராஸ் திரும்ப களத்திற்கு வந்து சிறப்பாக விளையாடினார். அவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.
ரிஸ்வானுக்கு மீண்டும் துணைக் கேப்டன் என்பது நியாயமானது அல்ல. பாபர் அசாம் எல்லா வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும். அதற்காக, துணைக் கேப்டன் பதவி கொடுக்க ஆதரவாக இருக்கக் கூடாது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பொறுப்பு ஏற்கும் தகுதி இருக்குமென்றால், அது சர்பராஸ் மட்டுமே.
இவ்வாறு லத்தீப் தெரிவித்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில 335 ரன்கள் விளாசினார். 176 பந்தில் 118 ரன்கள் எடுத்ததுடன் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர்.
இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் குஷல் மெண்டிஸ் டக் அவுட்டானார். மற்றொரு வீரர் நிசங்கா 8 ரன்னுடன் வெளியேறினார். குணதிலகா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.
தனஞ்செய டிசெல்வா 28 ரன் அடித்தார். அதிரடி காட்டிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் தசுன் சனகா 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஹசரங்கா டிசெல்வா 36 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கருணாரத்னே 14 ரன் அடித்தார்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரீஸ் ராவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா, சதாப்கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்குகிறது.
- ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
- ஆசிய கோப்பையை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இலங்கை தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பகர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் முகமது நவாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணி பேட்டிங்கில் நிசாங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர். வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும்.
இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்