என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Palani Leopard"
பழனி:
பழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, மான், புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக இடம்பெயர்ந்து வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
மேலும் குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி செல்வதால் பொதுமக்கள் அதனை விரட்டி வருகின்றனர். வனத்துறையினர் வன விலங்குகளை அகற்ற பல்வேறு முயற்சி மேற்கொண்டாலும் அவை இடம் பெயர்வதை முற்றிலும் தடுக்க முடிவதில்லை.
குதிரையாறு அய்யனார் கடை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதற்கான அடையாளங்கள் தென்பட்டன.
இதனையடுத்து வனத் துறையிருக்கு தகவல் தெரிவித்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களும் 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. #Leopard