search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palavekadu"

    • ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னல் பல்வேறு காரணங்களால் முகத்துவரப்பணி நிறத்தப்பட்டது.

    இந்நிலையில் முகத்துவார பகுதியில் மணல் சேர்ந்து அடைத்து உள்ளால் மீனவர்களால் படகுகளை அவ்வழியாக கொண்டு செல்ல முடியவில்லை.

    இதனால் கடந்த 2 வாரமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன் மார்க்கெட்டிற்கு மீன், நண்டு வரத்து முற்றிலும் குறைந்து விட்டதால் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாவட்டங்களுக்கு மீன் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையே பழவே ற்காட்டில் முகத்துவாரம் அடைப்பட்டு இருப்பதை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, மீன்வளத்துறை பொன்னேரி உதவி இயக்குநர் கங்காதரன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது நான்கு இடங்களில் முகத்துவாரம் வெட்டுவதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தற்காலிக முகத்து வாரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா ன பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×