search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paper Correction"

    • 24 ஆயிரத்து 330 பேர் பொதுத்தேர்வை எதிர்கொண்டனர்.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

    திருப்பூர் :

    கடந்த மார்ச் 13ந் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 92 மைய ங்களில், 24 ஆயிரத்து 330 பேர் பொதுத்தேர்வை எதிர்கொண்டனர்.கடந்த 3-ந் தேதியுடன் தேர்வுகள் நிறை வடைந்தன. விடை த்தாள்களை திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி ஆகிய இரு மையங்களில், தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

    மாவட்டத்தில் 9தாலுகா வில் இருந்து 1,605 முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளான நேற்று முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர் விடைத் தாள்களை மதிப்பீடு செய்தனர். இன்று (11ந் தேதி) முதல் உதவி தேர்வாளர்கள் விடைத் தாள் திருத்துவர். 10நாட்கள் நடக்கும் பணி வரும் 21-ந் தேதி நிறைவு பெறும். மே 5-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

    ×