என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PaRanjith"
- திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து நேற்று வெளியானது.
திரைப்படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 26.44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சீயான் விக்ரம் நடித்த படங்கள்ளில் மிகப் பெரிய தொடக்கமாகும். தங்கலான் திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக கிடைத்ததால் இதற்கான பாகம் 2 - ஐ எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதனை சீயான் விக்ரம் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். விரைவில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
- படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னை:
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.
தங்கலான் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என அறிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மாமன்னன் திரைப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் வாழ்த்தி பதிவிட்டிருந்தார்.
- இதற்கு பதிலளித்து உதயநிதி பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மாமன்னன் பட குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் பா. இரஞ்சித் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக கட்சியில் இன்று வரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குனர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
`மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
— Udhay (@Udhaystalin) July 3, 2023
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே… https://t.co/i3FAanRGca
- இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
- இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கழுவேத்தி மூர்க்கன் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒரு ஆழமான படம்னு நான் நினைக்கிறேன். இயக்குனர் ரொம்ப நேர்மையா இந்த படத்தை முயற்சி செய்திருக்கிறார்.
மிகவும் முக்கியமான பிரச்சினையை பற்றி டிஸ்கஸ் பண்ணுது. ரொம்ப நேர்மையா டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா நினைக்கிறேன். இயக்குனரோட சேர்ந்து இதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவர்களுடைய உழைப்பை மிகவும் நேர்மையா செய்திருக்கிறார்கள். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு பார்வையாளர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்றார்.
- ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.ரஞ்சித்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக விஜய்-க்கு வழங்கப்படவுள்ளது.
தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.இரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.
மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
- கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
- இந்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞரும், பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி, இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பின்னர் பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனரும், கவிஞருமான விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பின் போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை தொடரந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் விம்ரமுக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. காயம் காரணமாக தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் சிறிது காலம் பங்கேற்க மாட்டார் என்றும் விக்ரம் விரைவில் பூரண நலம் பெறுவார் என்றும் விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'.
- சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மே 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் 10 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
- தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.
2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.
தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இந்நிலையில் தண்டகாரண்யம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் 'தங்கலான்' கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தங்கலான் படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Welcoming the huntsman?@DanCaltagirone to the sets of #Thangalaan and social media✨@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @thehari___ @gvprakash @Lovekeegam @kishorkumardop @EditorSelva pic.twitter.com/etzTw8Iulc
— Studio Green (@StudioGreen2) February 21, 2023
- இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
- தற்போது பா.இரஞ்சித் சார்பில் புதிய படத்தின் அறிப்பு வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.
அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here you go! The Title look of #Thandakaaranyam✨
— pa.ranjith (@beemji) February 6, 2023
Best wishes to the entire team! @officialneelam @NeelamStudios_ @LearnNteachprod @AthiraiAthiyan @Tisaditi pic.twitter.com/W7PNfWvtzF
- பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான்.
- இப்படத்திற்கு விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு கதாபாத்திரங்களுக்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பாராட்டு நடிகர் விக்ரமுக்கு உண்டு. இவர் பிதாமகன், தெய்வத்திருமகள், அந்நியன், பீமா, ஐ, இருமுகன், கடாரம் கொண்டான், பொன்னியின் செல்வன் என்று பல படங்களில் இதை நிரூபித்தும் இருக்கிறார். இப்போது 'தங்கலான்' படத்திலும் தன்னை உருமாற்றி உள்ளார் இந்த படத்தை பா.இரஞ்சித் இயக்கி வருகிறார்.
கோலார் தங்க வயலில் பணியாற்றிய தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பை கோலார் தங்க வயல் பகுதியிலேயே நடத்தி வருகிறார்கள். இந்த படத்துக்காக விக்ரம் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம் போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக நிற்கும் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த தோற்றத்துக்கு மாற விக்ரம் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்