என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pardon"
- யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி
பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-
'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.
- அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
ஹங்கேரி நாட்டுப் பெண் அதிபராக இருந்தவர் கடாலின் நோவக். இவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு மன்னிப்பு வழங்கினார்.
அரசு நடத்தும் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த நிர்வாகிக்கு அதிபர் கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கு நீதித்துறை மந்திரி ஜூடிட் லர்கா அனுமதி அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிபர் கடாலின் நோவக்குக்கு எதிர்ப்பு வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் கடாலின் நோவக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சியில் கூறும்போது நான் ஒரு தவறு செய்துவிட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி, துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்.
ஆனால் அதில் நான் தவறு செய்துவிட்டேன். இன்று நான் உங்களை அதிபராக சந்திப்பது கடைசி நாள் என்றார்.
அதேபோல் நீதித்துறை மந்திரி வர்காவும் பதவி விலகினார்.
- மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
- மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.
ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.
நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்