என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parent"

    இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.
    இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ.எஸ்.ஏ. என்ற அமைப்பு உலக அளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய ஓர் ஆய்வு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்கள்.

    73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

    உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.

    பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.

    ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

    இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.

    இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.

    ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.

    தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

    இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.

    பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

    ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
    வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
    குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்துத்தருவது பெற்றோர்களின் கடமை என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, தண்டனைகள் தருவது, அதனால் மனதளவில் தானும் காயமடைந்து, பிள்ளைகளையும் காயப்படுத்தி, பின் வருத்தப்படுவது என பழைய பாரம்பரியமான ஒழுக்கமுறையே கடைபிடிக்கிறார்கள். இவர்களெல்லாம் எதிர்மறை ஒழுக்கமுறைக்கு உதாரணம் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

    Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?


    பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.

    நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது. இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…

    நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

    ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.

    பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.

    வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும். 
    குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள்.
    நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும்.  குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

    குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.

    இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.



    குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.

    பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.

    இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

    வாய் பராமரிப்பை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே சொல்லித்தர வேண்டியது அவசியம். சொத்தைப் பல் இருந்தால் நீங்களாகவே சிகிச்சை எடுக்காமல் பல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. இன்று சொத்தைப் பல்லை அடைப்பது உட்பட பல்வேறு நவீன பல் மற்றும் வாய் சீரமைப்புச் சிகிசைகள் புழக்கத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொண்டு பல் மற்றும் வாயைச் சீரமைக்கலாம். கண் பார்வைக் குறைபாடு அளவுக்கு அதிகமான செல்போன், டி.வி, கணிப்பொறி பயன்பாடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு, ஃபோட்டோ போபியா போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தைகளின் உடல் மொழியை எப்படி புரிந்து கொள்வது?

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.

    தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும்.

    குழந்தைக்கு தூக்கம் வருவதை எப்படி கண்டறிவது?

    மூக்கு, கண்களை கைகளால் குழந்தை தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும். நடவடிக்கைகள் மெதுவாக காணப்படும். தூக்கம் வருவதன் அறிகுறியாக சில வித்தியாசமான ஒலிகளையும் எழுப்பலாம். கைகள் அல்லது ஏதாவது பொருளை சப்பத் தொடங்கும்.

    இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டவுடன் தொட்டலிலோ மெத்தையிலோ மடியிலோ போட்டு லேசாக தட்டி கொடுத்தால் போதும். குழந்தை தூங்கி விடும்.

    தூங்க வைக்க சில டிப்ஸ்

    இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம். சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும். குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம். 
    கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.
    நடப்பு ஆண்டு எல்லோருக்கும் நன்மையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக அமைய வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் குறைவு இருக்காது. அவர்களுக்கு எது குறித்தும் கவலை கொள்ள அவசியம் இல்லை. ஆனால் படிப்பில் மட்டும் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதற்கு தங்களிடம் உள்ள குறைகளை அறிந்து திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். மாணவர்கள் மீதும் யாரும் எதையும் திணித்து விட முடியாது. அவர்களாக விரும்பினால் மட்டுமே எந்த செயலையும் செய்ய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கல்வியின் அவசியத்தை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் மாணவ பருவத்தில் பல்வேறு தவறுகள் நேர்ந்து விடக்கூடும்.

    ஆனால் அதே நேரத்தில் மாணவர் களுக்கு படிப்பு என்பது சுமையாக மாறி விடக்கூடாது. அவர்களின் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த கூடாது. புத்தகப்பை அவர்களுக்கு பாரமாக மாறி விடக் கூடாது என்றும் கல்வியாளர்கள் கருதினார்கள். அதனால் தான் விளையாட்டுடன் கலந்து கல்வி இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் தான் குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. எனவே 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க லாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம். போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள். ஆனால் படிக்காமலேயே தேர்ச்சி என்பது மாணவர்களிடம் படிப்பு குறித்த ஆர்வத்தை குறைத்து விடும். எந்த தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாற்றி விடும். எனவே மாணவர்களிடம் போட்டி உணர்வை உருவாக்கும் நோக்கத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் பெரிதும் துணை நிற்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக மாணவர்களிடம் கற்றல் குறித்த ஆர்வத்தை வளர்த் தெடுப்பதே மிகவும் முக்கிமானது.
    பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை.
    பற்சிதைவு என்பது பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனை அது. சரியான நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது! குழந்தைகளை பொறுத்தவரை, பற்களை சரியாக விளக்கினால், பற்சிதைவை தவிர்க்கலாம். ஏதேனும் காரணத்தினால் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை பற்சிதைவினால் அவதி படுகிறது என்பதை அறிய சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

    சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.

    அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.

    நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்பு புள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.

    உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம். 
    குழந்தை பிறந்த பிறகு, 5 வயது வரையிலும் குடல் தொடர்பான குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற ஷிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் ஷிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

    நோய் அறிகுறிகள்

    இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்சனைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறிகளும் இந்நோயால் உண்டாகிறது.

    இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சனை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஷிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

    நோய்த்தடுப்பு முறைகள்

    இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

    கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-ஐ மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்னை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்சனை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

    வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    வெளியூர் பயணங்களின்போது, நன்கு வேகவைத்த உணவு மற்றும் சுத்தமான தண்ணீர், பழங்கள்போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும்.
    வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. முதல் குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்சும் பெற்றோர், அடுத்த குழந்தை பிறந்ததும் கொஞ்சல், முக்கியத்துவத்தை இரண்டாவது குழந்தைக்குக் கொடுக்கின்றனர். தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டதை உணரும் குழந்தையின் மனதில் ஏக்கம், கோபம் உள்ளிட்ட குணங்கள் அதிகரிக்கின்றன.

    பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது தவறு… தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும். உதாரணமாக, சண்டையின் போது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் குழந்தைக்கு, மூன்று நாள்கள் வீட்டில் ரிமோட்டின் மீதான உரிமையைத் தடை செய்யலாம்.

    சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம்.
    ஒவ்வொரு குழந்தையின் தேவையும் வித்தியாசப்படும்.

    கைக்குழந்தைக்கு, பள்ளி செல்லும் குழந்தையைக் காட்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைக்கு அதிகளவு பாடத்தில் உதவி செய்ய வேண்டியிருக்கலாம். அதனால், எல்லா நேரங்களிலும் இரு குழந்தைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பெற்றோர் இதை எண்ணிக் குழப்பமோ, குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம்.

    இரண்டு குழந்தைகளையும் நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. முதல் குழந்தையிடம், ‘உன் தங்கையைப் பார்த்துக் கத்துக்கோ’ என்பது, ‘உன் வயசில் அக்கா அழகா ரைம்ஸ் சொல்லுவா’ என்பது… இதுபோன்ற உரையாடல்களைப் பெற்றோரும் மற்றவர்களும் அறவே கைவிட வேண்டும். ஏனெனில், இரண்டு குழந்தைகளிடம் இடைவெளியும் வெறுப்பும் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.

    குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது, தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.



    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு எப்படிப் பேசுவது, பிரச்னையை எவ்வாறு அணுகி சமாளிப்பது, விட்டுக்கொடுப்பது போன்ற குணங்களும், திறன்களும் வளரும். பெற்றோருக்குக் குழந்தைகளின் பொழுதுகளில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தள்ளியிருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

    இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.

    ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்னையில் குறுக்கிடும்போது, யார் பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அவா்களுக்கு என்ன வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும் நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

    கோபத்தைக் கையாளும் முறையைக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் தான் கற்றுக் கொள்கின்றனா். எனவே, கோபமாக இருக்கும்போது பெற்றோர், தவறான வார்த்தைகளைப் பிரயோகிப்பது, கதவை அடித்துச் சாத்துவது, பொருளை வீசுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற விஷயத்தில் ஈடுபடாமல், தெளிவாகப் பேசித் தீா்த்துக் கொண்டால் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள்.

    தினமும் குடும்பத்தில் அனைவரும் சோ்ந்து சாப்பிடுவது, சேர்ந்து டி.வி பார்ப்பது, சேர்ந்து அரட்டையடிப்பது போன்றவை குடும்பத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும்.

    வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்.

    உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!
    முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

    பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் குறைவாக இருத்தல், குறுகிய கவனத்திறன் போன்ற பாதிப்புகள் கொண்டது `ஆட்டிசம்’ எனப்படுகிறது. இந்த ஆட்டிசம்தான் குழந்தைகளை அச்சுறுத்துகிறது.

    முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

    முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெற்றோருக்கு என்ன வயதாக இருந்தாலும் அது பிரச்சினையில்லை என்றும் கூறுகிறார்கள்.

    ஆட்டிசத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்களையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பு இடைவெளிக் குறைவால் ஏற்படும் பாதிப்பை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.

    “நாங்கள் பல்வேறு கோணங்களில் அலசினாலும், இந்த உண்மையைப் புறக்கணிக்க இயலவில்லை” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நியார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான பீட்டர் பியர்மான் கூறுகிறார். அதேநேரத்தில், இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

    முறையாகத் திட்டமிடாமையால் அமெரிக்காவில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது, 1995-ம் ஆண்டில் மொத்தக் குழந்தை பிறப்பில் 11 சதவீதமாக இருந்தது என்றால், 2002-ல் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
    குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
    குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.

    பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச்செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

    குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.

    குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.



    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளைகளைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

    ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

    குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித்தனியாக செய்ய வேண்டும். `உன்னைவிட அவன் ஒசத்தி’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

    குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #VelloreCollectorOffice
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளையமகன் ஜானகிராமன் (வயது 28). இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி வற்புறுத்தி வந்து உள்ளார்.

    மேலும் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஜனகிராமன் தனது பெற்றோர் மீது புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஜானகிராமன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜானகிராமன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #VelloreCollectorOffice
    நம் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும் போதும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை சொல்லித்தர வேண்டும். அந்த பாதுகாப்பு விதிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்
    * முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும்.

    * குழந்தைகள் அதிக அளவில் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர். என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.

    * எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.

    * நம் வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.

    * கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா - அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால், அவர்களிடம் உதவி கேட்கச் சொல்லலாம்.
    ×