என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parivendar"

    • கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாரிவேந்தர் எம்.பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    • எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஐ.ஜே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் நிற்க விருப்பம்.

    சென்னை:

    இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர்.பாரிவேந்தரின் 84-வது பிறந்தநாள் விழா காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

    கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பாரிவேந்தர் எம்.பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். பின்னர் பாரிவேந்தர் எம்.பி. பேசியதாவது:-

    பணம் கொடுத்து அழைப்பது அல்ல கூட்டம் தானாக விரும்பி வரவேண்டும். எனக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கு நூறு விருப்பம் இல்லை. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஐ.ஜே.வுக்காக உழைக்கும் தம்பிகளுக்காக தேர்தலில் நிற்க விருப்பம்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏக்களை உருவாக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதிக்கு 6 சட்டப்பேர வை தொகுதி என்பதால் ஐ.ஜே.க.வினரை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து , பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன், பொருளாளரும் மூத்த வழக்க றிஞருமான ஜி.ராஜன், கட்சியின் முன்னாள் தலைவர் கோவைத்தம்பி, முதன்மை அமைப்புச் செயலாளரும்,பா.மு.ச. தலைவருமான எஸ்.எஸ்.வெங்கடேசன், இணை பொதுச்செ யலாளர்லிமா ரோஸ் மார்ட்டின், தலைமை நிலையச்செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், துணைத்தலைவர் ஆனந்தமு ருகன், துணை பொதுச்செயலாளர்கள் நெல்லை ஜீவா, உதயசூரியன், எம்.ரவிபாபு, மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், விளம்பரப்பிரிவு செயலாளர் முத்தமிழ்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் லதா மற்றும் பார்க்கவகுல முன்னேற்றசங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளது.
    • ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை.

    பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், "பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக" குறிப்பிட்டார்.

    மேலும் அவர், "பெரம்பலூர் எம்பி தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வழங்கப்படும்.

    தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை" என கூறினார்.

    • மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள்.
    • டும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான்.

    பாராளுமன்ற தொகுதி தொட்டியம் பகுதியில் பாரிவேந்தர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    எனது உரையை துவக்குவதற்கு முன்னால் இங்கு வந்திருக்கிற சகோதர் ஒருவர் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார்.

    முதலாவதாக தொட்டியம் பகுதியில் வாழை மற்றும் வெற்றிலை விவசாசயத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இரண்டாவது வாழைக்காய் மதிப்புக் கூட்டி விற்பனை தொழிற்சாலை அமைக்க வேண்டும். முன்னால் சொன்ன கோரிக்கை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது. இரண்டாவது கோரிக்கை நான் செய்ய வேண்டியது இதை நான் பார்த்துக் கொள்கிறேன். மூன்றாவதாக செயல்படாத காகிதம் செய்யும் ஆலையை சீர்செய்து தருமாறும் இந்த மூன்று கோரிக்கைகளை தொட்டியம் பகுதிக்காக கேட்டுள்ளார். ஒரு திட்டம் தமிழ்நாட்டை சேர்ந்தது மற்ற இரண்டும் மத்திய அரசை சேர்ந்தது இந்த கோரிக்கைகளை நான் வெற்றி பெற்ற பிறகு முடித்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன். இதை படித்தாலே கடந்த பாராளுமன்ற தொகுதிக்கு என்ன செய்தேன் என்பது உங்களுக்கு தெரியவரும்.

    மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. ஏதாவது செய்திருந்தால் தானே புத்தகம் போடுவார்கள் நான் செய்திருக்கிறேன் அதனால் புத்தகம் போட்டேன்.

     

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். நீர் தேக்க தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். அதேபோல் அரியலூர், பெரம்பலூர், துரையூர், நாமக்கல் இதை இணைக்கும் ரெயில் பாதை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பாதி வேலை முடிவடைந்துவிட்டது.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன்.

    அரசியலுக்கு வருவோர் பெரும்பாலும் என்ன சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் வருவார்கள். நான் இங்கு வந்திருப்பது சம்பாதிப்பதற்றாக அல்ல. என்னால் முடிந்ததை என் மக்களுக்கு என் சொந்த பணத்தில் இருந்து உதவி செய்துதான் எனது கொள்கையாக வைத்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் அவரை யாரும் குறை கூற முடியுமா? மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு முதலமைச்சாராக இருந்தார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார். அவர் பணக்காரர் இல்லை. வறுமை கோட்டிற்கும் கீழே உள்ள ஏழை. அவரது அம்மா அவரை நன்கு படிக்க வைத்தார். தனது சொந்த உழைப்பால் அவர் பிரதமர் ஆகி இருக்கிறார்.

    நாட்டு மக்கள் என்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் பெண்களுக்காக நல்ல திட்டங்களை கொண்டுவது செயல்படுத்தியும் இருக்கிறார். மோடியை விட்டால் நமக்கு வேறு வழிகிடையாது, அவர் எதிர்பதற்கும் வேறு ஆள் கிடையாது.

    மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் மதிக்கின்றனர். மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை. இந்தியா கூட்டணி இந்தியாவை காப்பாற்ற வருபவர்கள் அல்ல. இந்தியாவை உடைப்பதற்கு வருகிறார்கள். ஒற்றுமை என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்தையும் பிரிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். எந்த ஒரு கேட்ட காரியத்தையும் முதலில் ஆரம்பிப்பது திராவிட திருவாளர்கள் தான். ஊழல் முதலில் ஆரம்பித்தது திராவிட திருவாளர்கள் தான். இவர்களுக்கு நீங்கள் வாக்களித்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க கூடாது. குடும்ப ஆட்சி என்ற கருத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இவை அனைத்து திராவிட திருவளார்கள் ஆரம்பித்தது தான். ஆகவே எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்

    மறந்தும் கூட இந்த முறை திமுக நிர்வாகிகளை அனுப்பினால் பாராளுமன்றத்தை முடக்கி விடுவார்கள், செயல்பட விடமாட்டார்கள், மோடியை திட்டுவதே குறியாக இருப்பார்கள். விவேகானந்தர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் நமக்கு மோடி என்ற ஒரு நல்லவர் கிடைத்திருக்கிறார். இதை புரிந்து கொண்டு நாட்டினுடைய வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்று கூறினார்.

    • பெரம்பலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
    • பெரம்பலூர் 4 ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்பட பல பகுதிகளில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    2013-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் பாரிவேந்தர்.

    தி.மு.க.வில் அப்பா நேரு மந்திரி! பிள்ளை அருணுக்கு பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கு சீட்! ஒரு குடும்பத்திற்கு எத்தனை பதவி தான் கொடுப்பாங்க?

    தி.மு.க. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் இருபதைக் கூட நிறைவேற்றவில்லை இந்த இரண்டரை ஆண்டுகளில்.

    பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. அமைச்சர் துரைமுருகனின் மகனான வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கூறுகிறார், தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மினுக் மினுக் என இருக்கிறார்களாம். தி.மு.க. மகளிர் உதவித்தொகையில் அழகு கிரீம் தடவிக் கொண்டிருக்கிறார்களாம். இப்படியா தாய்க்குலத்தை கேவலப்படுத்துவது?

    பெண்களை மரியாதையாக, பாதுகாப்பாக நடத்தும் கட்சி பாரதிய ஜனதா.

    அரியலூர், பெரம்பலூர், முசிறி, நாமக்கல், துறையூர் பகுதிக்கான ரெயில்வே திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும்.

    அடித்தட்டு மக்களுக்காக உழைக்கக் கூடிய பாரிவேந்தர் வெற்றி பெற ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும், தலைவர்களும் உயிரைக் கொடுத்து பாடுபட வேண்டும்.

    பிரதமர் மோடி பாரிவேந்தருக்காக தாமரைச் சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை தர இருக்கிறார். பிரதமர் மோடியின் பேரன்பைப் பெற்றவராக பாரிவேந்தர் திகழ்கிறார் என தெரிவித்தார்.

    • பா.ஜ.க. கூட்டணி சார்பில் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிடுகிறார்.
    • பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

    பெரம்பலூர்

    தமிழகத்தின் கல்வி வள்ளலான டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1,200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஐ.ஜே.கே. நிறுவனர் டாக்டர் பாரிவேந்தார், பாஜக தலைவர் அண்ணாமலையைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர்.

    பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

    முன்னதாக, பெரம்பலூர் நான்கு ரோடு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூட்டணி கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒருசேர பிரசார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்தனர்.

    பெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரெயில் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது.

    இம்முறை பாரிவேந்தர் வெற்றி பெற்றால் 1,500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார்.

    மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்துவந்தவர் பாரிவேந்தர். பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது.

    தாமரைச் சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக ஒவ்வொரு பா.ஜ.க. நிர்வாகியும், தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக் கொடுத்து வேலை பார்க்க வேண்டும்.

    பெண்களை அவமானப்படுத்தும் தி.மு.க.வின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம். உண்மையான மனிதர் டாக்டர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்வது நமது கடமை என பேசினார்.

    • கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.
    • கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.

    கல்லாற்றில் தடுப்பு அணை அமைக்கப்படும் என திருச்சி மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் பரப்புரை மேற்கொண்ட பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

    பூலாம்பாடி கிராமத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். தொடர்ந்து ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் எனவும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார். மேலும் கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார். இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் - RT இராமச்சந்திரன் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் IJK மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

    அரும்பாவூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தார், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள் என வலியுறுத்தினர். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

    பாரிவேந்தர் அளிப்பது வாக்குறுதி அல்ல வாழ்க்கைக்கு உறுதி

    கல்வி, மருத்துவம் என இரண்டையும் தனது கண்களாக நினைப்பவர் டாக்டர் பாரிவேந்தர். காரணம் பல கல்வி நிறுவனங்களை தொடங்கிய வெற்றி கண்டவர். அதன் பயனாக பல மாணவர்களை வாழ்க்கையில் ஏற்றம் பெற செய்தவர். பல மருத்துவமனைகளை நிறுவி பலர் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை தனி நபராக செய்து செய்து வருபவர். கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி எம்.பியாக இருந்து மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றியுள்ளார்.

    ஓடி ஓடி உழைக்கனும் ஊருகெல்லாம் கொடுக்கனும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தனது வாழ்கையை மாற்றியவர். தான் சம்பாதித்த பணத்தை தொகுதி மக்களுக்கான வாரி வழங்கி வருகிறார். இன்னும் வழங்க இருக்கிறார்.

    பெரம்பலூர் மக்களின் நீண்ட கால கனவு திட்டமான அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் ரயில் திட்டத்திற்கு அனுமதி பெற்று செயற்கைகோள் ஆய்வை துவங்கி வைத்தவர் டாக்டர் பாரிவேந்தர்.

    உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர்,பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 1 கோடி மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி மக்களின் ஆரோக்கியம் காத்த அற்புதமான மனிதர் நமது டாக்டர் பாரிவேந்தர். சிறுகனூரில் புதிய மேம்பாலம் இருங்களூரில் புதிய மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அளவில் சிறந்த எம்.பி என்ற நற்பெயரை ஈட்டியுள்ளார்.

    நாளைய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையோடு மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடக்க கல்வி முதல் பலதரப்பட்ட மேற்கல்வி வரை 1200 மாணவர்களுக்கு வழங்கிய தனி நபராக இருந்து சாதனை புரிந்தவர். அழியாத கல்வி செல்வத்தை வழங்கி பல மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றி குடும்பங்களின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறார். கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் சிகிச்சை பெற தான் நடத்தும் மருத்துவமனைகள் மூலம் உதவியவர்.

    இந்த முறையும் தான் ஒரு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். குடும்பத்திலுள்ள தாய், தந்தை தான் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் வாழ்வில் உச்சம் பெற வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் எம்பியாக இருக்கும் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் உள்ள மக்களை அனைவரையும் தனது குடும்பமாக தான் பார்க்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி உதவியை வழங்கி வருகிறார். இந்த முறை தான் எம்பியாக பதவியேற்றால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வியை வழங்குவதாக பெரம்பலூர் மக்களுக்கு கல்வி தந்தையாக தனது கடமை சிறப்பாக செய்வதற்கு உறுதியளித்துள்ளார். பாரிவேந்தர் வர்றாரு படிக்க வைக்க போறாரு என பாடல் பாடி அப்பகுதியிலுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • பெரம்பலூரின் பூலாம்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    • கல்லாற்றில் தடுப்பணை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பூலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரெயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தார்.

    கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அரும்பாவூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரெயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிடுங்கள். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

    • வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல் இது என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல். பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல். அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள். கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரப்புரை செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை வகுப்பறைகள், சமூகக் கூடங்கள், நியாயவிலைக் கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக்கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளேன். இதன்மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிடாத வகையில் தான் புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறேன் என்றார்.

    பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர், நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும். தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1,500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும், தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    • முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்த ரவி பச்சமுத்து, அங்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
    • அப்போது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பாரிவேந்தர் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தருக்கு ஆதரவாக முசிறி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டாக்டர் ரவி பச்சமுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் பெருமைமிக்க பிரதமராக வீற்றிருக்கும் மோடி மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வென்று சாதனை படைப்பார் என திரண்டிருந்த வாக்காளர்களிடையே நம்பிக்கை தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாங்கரைப்பேட்டையில் குழுமியிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பாரிவேந்தருக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


    அதன்பின், திருச்சி மாவட்டம் முசிறியின் பல்வேறு இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாரிவேந்தர் மீண்டும் எம்.பி.யானால் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் பாதை, மகளிர் அரசு கல்லூரி, 1,500 குடும்பங்களுக்கு உயர்தர இலவச சிகிச்சை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்வார் என உறுதி அளித்தார்.

    பாரிவேந்தர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் போட்டியிடுகிறார். டாக்டர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்.பி.யாக வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே, முசிறி துறையூர் சாலையில் உள்ள பேக்கரியில் தேநீர் அருந்திய ரவி பச்சமுத்து, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபோது, முசிறியில் மகளிர் கலைக்கல்லூரி, காவிரி ஆற்றில் தடுப்பணை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தரவேண்டும் என மக்களும், விவசாயிகளும்கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலளித்து பேசிய அவர், பாரிவேந்தர் 3 கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்காக பணியாற்ற தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

    • வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    பாராளுமன்ற தொகுதி வடக்கு ஈச்சாம்பட்டி, சிறுகானூர், நடு இருங்கலூர், கீழ வானகரம் மற்றும் பல்வேறு இடங்களில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019த்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    குறிப்பாக இந்த பகுதியில் பள்ளிகளில் 42 வகுப்பறைகள் கட்டி கொடுத்திருக்கிறேன். அதேபோல் கழிவறைகள், சுற்றுசுவர் அமைத்து கொடுத்திருக்கேன். கடந்த முறை மத்திய அரசிடம் இருந்து என்ன நிதி பெறுகிறோம் என்றும் அதை எப்படி செலவிடுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். இதுவரை மூன்று மேம்பாலங்கள் கட்டிகொடுத்திருக்கிறோம். 9 தரைப்பாளங்களை கட்டிக்கொடுத்திருக்கிறோம். சிறுகனூரில் மேம்பாலம், தரைப்பாலம், ரேஷன் கடை போன்றவற்றை அமைத்து கொடுத்திருக்கிறேன்.

    இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம். ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்தும், எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை அளித்துள்ளோம். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகாளாக ஆகியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 108 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    கடந்த 10 வருடங்களாக மோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மோடி தலைமையிலான 70 மந்திரிகள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் இங்கு அப்படியில்லை. ஊழல் செய்து வழங்கில் உள்ளார்கள் எப்படி தப்பிப்பார் என்றும் தெரியவில்லை. ஆகவே இந்தியாவிற்கு நல்ல ஆட்சி கொடுத்து, உலக நாடுகள் அனைத்து வியந்து பார்த்த அந்த மாமனிதரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு 10 ஆண்டுகள் முதலமைச்சாராக இருந்தார். குஜராத்தில் நல்ல ஆட்சி கொடுத்திருக்கிறார். இந்த 23 வருடங்களில் அப்பழுக்கற்றவராக இருக்கிறார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் 1500 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் வீதம் மருத்துவ காப்பீடு வசதி செய்து தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மருத்துவ உதவி என்றால் சாதாரண மருத்துவம் அல்ல உயர்தர சிகிச்சை செய்து தருகிறேன்.

    நடு இருங்கலூரில் பேசும் போது, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக அரசு வெற்றி பெற்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்தே மகளிர் உரிமை தொகை ரூ.1000 அளித்தனர். 3 வருடங்களில் ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இந்த 36 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மாதம் 1000 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோஷபட்டிருக்கலாம். ஐந்து வருட ஆட்சியில் 2 வருடங்கள் மட்டும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். போலி வாக்குறுதிகளை மட்டுமே திமுக குடும்ப ஆட்சில் கொடுக்க முடியும். திமுக ஆட்சியில் 8.75 கோடி கடன் வைத்துள்ளது. திமுக அரசு கஜானவை காலி செய்து உள்ளனர். ஒவ்வொரு தமிழன் மீது கடன் சுமையை ஏற்றி உள்ளனர்.

    ஆகவே, மோடியின் ஆட்சிக்கு பிறகு தான் இந்தியாவை உலகநாடுகள் திரும்பி பார்க்கின்றனர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமை என்று அவர் பேசினார்.

    • மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்மான ரயில்வே திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
    • சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு, கல்வி தெய்வமான சரஸ்வதி அமர்ந்திருக்கும் பீடமான தாமரைக்கு வாக்களியுங்கள்.

    பெரம்பலூர் தொகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு திட்மான ரயில்வே திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என பெரம்பலூர் மக்களவைத் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதியளித்துள்ளார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வீதி வீதியாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், உமையாள்புரம், செவந்தி லிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, வெள்ளூர் கிராமத்திற்கு வருகை தந்த டாக்டர் பாரிவேந்தருக்கு, வாணவேடிக்கை முழங்க, பட்டாசு வெடித்து கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து, காமாட்சிபட்டி கிராமத்திற்கு வருகை தந்த பாரிவேந்தருக்கு, கூட்டணிக் கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடையே உரையாற்றிய டாக்டர் பாரிவேந்தர், நல்லவர்கள் ஆட்சி செய்தால் சந்தோஷம் வரும் கெட்டவர்கள் ஆட்சி செய்தால் கஷ்டம்தான் வரும் எனத் தெரிவித்தார். 5 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களை புத்தகமாக வெளியிட்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் பகுதிகளை இணைக்கும் ரயில்வே திட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும் என டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து, தண்டலைப்புத்தூர் பகுதியில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தர், தன் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றைக்கும் வீண் போகாது எனத் தெரிவித்தார். மத்திய அரசுக்கு பெரம்பலூர் தொகுதிக்கு வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடி ரூபாயை முழுமையாக மக்கள் திட்டங்களுக்காக செலவு செய்துள்ளதாக டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்தார். சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு, கல்வி தெய்வமான சரஸ்வதி அமர்ந்திருக்கும் பீடமான தாமரைக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் டாக்டர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.

    கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து IJK தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து புமுதேரி, வடசேரி , பில்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், இம்முறை வெற்றி பெற்றால் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம்10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு திட்டத்தை மக்கள் உயர் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். மேலும் பேரூர் பகுதியில் இடிந்துள்ள கான்கிரீட் வீடுகளை பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் சாலை விரிவாக்க பணி மற்றும் தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் ரவி பச்சமுத்து கூறினார். இதில் BJP தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா, பிரதீப், IJK மாநில துணை செயலாளர் நெல்லை ஜீவா, மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன்.
    • நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன்

    திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி காக்காயம்பட்டி நால்ரோடு பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயை எனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பள்ளிக்கூடங்களில், ஏனைய தேவை உள்ள அத்தனை இடங்களிலும் மனுக்களாக பெறப்பட்டு அவர்களின் தேவைகளை முழுவதுமாக செய்து கொடுத்துள்ளேன்.

    அரசு பள்ளிக்கூடங்களுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம்.ஆகவே அந்த 17 கோடியை முழுவதுமாக செவழித்து விட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.

    ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். மீண்டும் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்வேன்.

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்து வைப்பேன்.

    வேட்டை நாயக்கர்கள் என்கிறவர்கள் அவர்களது ஜக்கம்மா தெய்வத்திற்கு முயல் ரத்தம் வைத்து வழிபடுகிறார்கள். காட்டுக்குள் வேட்டைக்கு செல்ல கூடாது என அந்த சமூகத்தினருக்கு ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த 50 பேரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு வாரம் அங்கி வைத்திருந்து பாராளுமன்றத்தை காட்டி, தாஜ் மஹாலை காட்டி. அதற்கான மந்திரியிடம் பேச வைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து பிரச்சனையை சொன்னோம்.

    இதன் பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பதில் வந்தது. அதில் வேட்டை நாய்கள் தடுக்கப்பட்ட விலங்கினங்கள் அல்ல. அவற்றை பயன்படுத்தலாம் என்று பதில் வந்தது. எனவே நீங்கள் தைரியமாக வேட்டை நாய்களை பயன்படுத்தலாம். அதையும் மீறி வனத்துறையினர் தடுத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் பேசினார்.

    ×