என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parlilament"
- மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
- உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.
எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.
நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மணிப்பூரில் பாஜக அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங். எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
- மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, "மணிப்பூரில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் 143 பேர் பலியாகியுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, அந்த மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்" என்றார்.
மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.
மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.
- ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
புதுடெல்லி:
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் இன்று பாராளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்