என் மலர்
நீங்கள் தேடியது "Parrys Bus Stand"
- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பஸ் நிலையத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது.
- பஸ் நிறுத்தும் இடங்கள், வர்த்தகப் பகுதி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஆகியவை அடங்கிய மல்டி மாடல் பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது.
சென்னை:
பாரிமுனை பஸ் நிலையத்தில் 21 மாடிகளுடன் நவீன பிரமாண்ட கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
சென்னையின் முக்கிய மாநகர பஸ் நிலையமாக பாரிமுனை பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பஸ் நிலையம், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன.
பாரிமுனை பஸ் நிலையத்தில் தினந்தோறும் 695 மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன.
இந்த பஸ்கள் 70 வழித்தடங்களில் 3,872 முறை பயணித்து வருகின்றன. இங்கு இருந்து சென்னை மாநகரின் தெற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பஸ் நிலையத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. பஸ் நிறுத்தும் இடங்கள், வர்த்தகப் பகுதி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஆகியவை அடங்கிய மல்டி மாடல் பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது. இதற்காக 4.42 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயன்படுத்த உள்ளது. இதில் 21 மாடிகள் கொண்ட மிகப்பெரிய பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதில் வணிக வளாகம், தனியார் வணிக அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து வருகிறது.