search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passenger shed"

    • நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதில் பொரு த்தப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து வருவதுடன் நிழற்குடையை சுற்றிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில்;-

    பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் நிழற்குடையைச் சுற்றிலும் புதர்மண்டி உள்ளதுடன் இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சூழலில் நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக கொண்டு மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவு கிறது.

    பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தும் அதன் முன்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்று வதற்கும் அதிகாரிகள் முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×