என் மலர்
நீங்கள் தேடியது "passes away"
- நடிகர் மனோஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை காலமானார்.
இவரது மறைவின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ.
- ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.
டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் ரே மிஸ்டீரியோ (66).
இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும்.
இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகிவில்லை.
ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாடகர் ஜெயசந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் இன்று காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாடகர் ஜெயசந்திரன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.
தமிழில், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, ஒரு தெய்வம் தந்த பூவே, காத்திருந்து காத்திருந்து போன்ற பல்வேறு பிரபல தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார்.
1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் பின்னணி பாடகர் பி.செயச்சந்திரன்.
- சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
- முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா (வயது 77). முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சி பணியாற்றி வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டசபை சபாநாயகரானார்.
1991 முதல் 1996-ம் ஆண்டு வரை சபாநாயக ராக பொறுப்பு வகித்தார். 1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
தரைவழி போக்குவரத்து இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த நேரத்தில் வாஜ்பாயின் அரசு ஒரு ஓட்டில் கவிழ்ந்தது. அப்போது சேடப்பட்டி முத்தையாவின் நடவடிக்கையில் ஜெயலலிதாவுக்குஅதிருப்தி ஏற்பட்டது. அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்.
இதனை தொடர்ந்து சேடப்பட்டி முத்தையா அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தற்போது வரை தி.மு.க.வில் இருந்து வந்தார். சொந்த ஊரான முத்தப்பன்பட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உடல் நலம் பாதித்து காலமானார்.
சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும் 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகன் மணிமாறன் தி.மு.க. மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேடப்பட்டி முத்தையாவின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
- நகைச்சுவை நடிகர் பென்னி ஹில் உடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.
- எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, பாடல் புத்தகம் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு தீம் ட்யூனை தயாரித்த பிரிட்டிஷ் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94. இவரது மறைவு குறித்து, நார்மனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மாண்டி நார்மன் 11 ஜூலை 2022 அன்று ஒரு குறுகிய நோய்க்குப் பிறகு இறந்தார் என்ற செய்தியை நாங்கள் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
1928-ல் லண்டனின் கிழக்கு முனையில் யூதப் பெற்றோருக்கு மாண்டி நார்மன் பிறந்தார். இவர் தனது16 வயதில் முதல் கிட்டார் இசைக் கருவியை பெற்றார்.
ஆரம்பகாலத்தில் பிரிட்டிஷ் ராக்கர்ஸ் கிளிஃப் ரிச்சர்ட் மற்றும் டாமி ஸ்டீல் ஆகியோருக்கு பாடல்களை எழுதுவதற்கு முன்பு அவர் பெரிய இசைக்குழுக்களுடன் பணியாற்றினார். நகைச்சுவை நடிகர் பென்னி ஹில்லுடன் பல்வேறு இரட்டை நடிப்பில் நடித்துள்ளார்.
டாமி ஸ்டீல் மற்றும் மேக் மீ அன் ஆஃபர், எக்ஸ்பிரஸ்ஸோ போங்கோ, சாங்புக் மற்றும் பாப்பி உள்ளிட்ட மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
1962-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'டாக்டர் நோ' என்கிற முதல் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கான கருப்பொருளை உருவாக்க தயாரிப்பாளர் ஆல்பர்ட் நார்மனை பணியமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்னிஸ் விளையாட்டில் தனது அபார ஆட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு சிறப்புகளை சேர்த்தவர்கள் ஆனந்த் அமிர்தராஜ், விஜய் அமிர்தராஜ், அசோக் அமிர்தராஜ் சகோதரர்கள்.

இந்த அமைப்பில் பயிற்சி பெற்று முன்னணி ஆட்டக்காரர்களாக திகழ்ந்தவர்களில் லியான்டர் பயஸ் மற்றும் சோம்தேவ் தேவ்வர்மன் ஆகியோர் உலக அரங்கில் பல்வேறு வெற்றிகளை குவித்தனர்.
இந்நிலையில், சிலகாலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த மேகி அமிர்தராஜ்(92) சென்னையில் இன்று காலமானார். அவரது இறுதி அஞ்சலி பிரார்த்தனை கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள செயிண்ட் தெரசா தேவாலயத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். #VijayAmritraj #MaggieAmritraj #RIPMaggieAmritraj

வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷரிப் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
85 வயதான அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
கடந்த 23-ந்தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள போர்டிஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு உடல்நலம் சற்று தேறியது.
இதயத்தில் உள்ள கோளாறை சரி செய்வதற்காக நேற்று ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மதியம் அவர் இருந்த அறையில் இருந்து ஸ்டிரெச்சரில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.
அப்போது தனது பேரன் அப்துல் வகாப் ஷெரீப்பிடம் நான் உயிர் பிழைக்கமாட்டேன். நான் மரணமடைய போகிறேன் என்று கூறினார். பின்னர் ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று ஆபரேஷன் டேபிளில் படுக்க வைத்தனர். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
நான் இறந்துவிடுவேன் என்று சொன்ன சில நிமிடங்களில் அவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் உயிர் போகப் போவதை முன்கூட்டியே தெரிந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜாபர் ஷரிப்பின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அக்கம் செய்யப்பட்டது.
ஜாபர் ஷரிப் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் செல்வாக்கு பெற்ற நபராக திகழ்ந்தார். இந்திராகாந்தியின் தீவிர விசுவாசியான அவர் இந்திராவின் ஆதரவினால் அரசியலில் பல்வேறு நிலைக்கு உயர்ந்தார்.
மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது.
அவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, பல வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. #FormerRailwayminister #CKJafferSharief
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜாபர் ஷரிப். அம்மாநில காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-95 ஆண்டுகளுக்கிடையில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரசில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கியபோது கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் இந்திரா காந்தியை ஆதரித்த தலைவர்களில் முக்கியமானவராகவும் ஜாபர் ஷரிப் இருந்தார்.
கேரளா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான எம்.ஐ ஷானவாஸ் (வயது 67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2-ம் தேதி அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

எம்பி ஷானவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷானவாஸ். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். #WayanadMP #ShanavasMP #KeralaCongress
மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது.
இந்த நிலையில் மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் புற்றுநோய் காரணமாக அவதிப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அனந்தகுமார் அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UnionMinister #Anandakumar
பாஜகவின் மூத்த தலைவரான மதன்லால் குரானா 1936-ம் ஆண்டு பிறந்தவர். 82 வயதான இவர், 1993-96 ஆகிய காலகட்டத்தில் டெல்லியின் முதல்மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர பிரச்சாகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2004-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வந்த மதன்லால் குரானா டெல்லியில் இன்று மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. MadanLalKhurana #RIPMadanLalKhurana