search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pataliputra"

    • முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
    • வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.

    ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
    • இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது என விமர்சித்தார்.

    பீகார் தலைநகர் பாட்னாவின் அருகில் உள்ள பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இன்று (மே 25) நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    பேரணியின் அவர் உரையாற்றியபோது, "சிறுபான்மை எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து அவர்களை அடிமைப்படுத்தி இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முஜ்ரா நடனம் ஆடுகிறது

    தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்கும் முயற்சிகளை முறியடிக்க நான் சபதம் ஏற்றுள்ளேன். ஓட்டு ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுடன் எதிர்கட்சி (ஆர்ஜேடி) கூட்டணி வைத்திருக்கிறது" என்று கூறினார். மேலும் முஸ்லீம் குழுக்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் மேற்கு வங்க அரசின் முடிவை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு அதை வரவேற்பதாக தெரிவித்தார்.


     



    தொடர்ந்து பேசிய அவர், "பாடலிபுத்திரா தொகுதி பாஜக வேட்பாளர் ராம் கிருபால் யாதவின் பெயரில் ராம் என்ற வார்த்தை இருப்பதால் அதைக் கேட்டு முகம் சுளிக்க்கும் அளவுக்கு ராமரை எதிர்க்கட்சிகள் வெறுக்கின்றன. இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது" என விமர்சித்தார்.  

    ×