search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Patent"

    அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் குவால்காம் நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு பதிவு செய்துள்ளது.


     


    குவால்காம் நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் குவால்காமின் நான்கு காப்புரிமைகளை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் பதிவு செய்திருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நான்கு காப்புரிமைகளிலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக குவால்காம் கடந்த ஆண்டு வாதிட்டது குறிப்பிடத்தக்கது. காப்புரிமைகளில் புதிய அம்சங்கள் இல்லாததால், குவால்காம் பதிவு செய்திருக்கும் நான்கு காப்புரிமைகளையும் ரத்து செய்ய வேண்டும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.

    தானாக ஃபோக்கஸ் செய்யும் டிஜிட்டல் கேமரா, மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் போன்று இயங்கும் சாதனம், டச் சென்சிட்டிவ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் சர்கியூட் மெமரி உள்ளிட்டவற்றுக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களை விட காப்புரிமை அலுவலகங்கள் வேகமாக இயங்கும் என்பதால், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கின் அடுத்தக்கட்டமாக ஆப்பிள் மனுக்களை மறுசீராய்வு செய்து காப்புரிமை சோதனைக்கு பின் குவால்காம் தரப்பு வாதங்கள் பெறப்பட வேண்டும். மறுசீராய்வுக்கு பின் தீர்ப்பு வெளியிடப்படும்.  

    முன்னதாக சர்வதேச வர்த்தக ஆணையம் குவால்காமின் காப்புரிமைகளை ஆப்பிள் மீறுவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ×