என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pawan Khera"
- பிரதமர் மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
- அப்போது பேசிய அவர், எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன் என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன் என்றார்.
இந்நிலையில், மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் பற்றி மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியதாவது:
மத்திய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை புத்திசாலித்தனமாக ஏதாவது சொல்வார் என நினைத்தோம்.
நீட் தேர்வு பற்றியோ, ரெயில்வே விபத்து பற்றியோ, தினசரி உள்கட்டமைப்பு சரிவுகள் பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை.
டெல்லி விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவர் பேசவில்லை.
மக்கள் நலன் சார்ந்த எந்தப் பிரச்சனையையும் பிரதமர் பேசவில்லை. நிகழ்ச்சி நிரலை மாற்றுவதே அவரது முறை.
எல்லோரும் நீட் மோசடிகள் பற்றி பேசுவதால், கவனத்தைத் திசைதிருப்ப நீங்கள் கேரளாவிலிருந்து குடை பற்றி பேசுகிறீர்கள்.
தேர்தலின் போது தெற்கிற்கு எதிராக வடக்கே போட்டியிட்டீர்கள். மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா?
பிரச்சாரத்தின் போது நீங்கள் சொல்வது உண்மை, இப்போது நீங்கள் செய்வது பிரசாரம் என தெரிவித்தார்.
- மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தை காண செல்வது பற்றிய ANI செய்தியில் மோடியின் புகைப்படம் பின்னணியில் இருந்தது. பின்னர் அந்த புகைப்படத்தை ANI மாற்றியுள்ளது.
இதனை கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரெயில் விபத்து செய்தியில் 'முதலாளி'யின் படத்தை காட்டக் கூடாது. கூடாது என்றால் கூடாதுதான்" என்று பதிவிட்டுள்ளார்.
- அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது.
- இது பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கனோட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ராமர் மீது பக்தி செய்தவர்கள் படிப்படியாக திமிர் பிடித்தனர். அந்தக் கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதிகாரம் மற்றும் அவர்களின் ஆணவம் காரணமாக 241-ல் ராமரால் நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.
அவரது இந்தப் பேச்சு பாராளுமன்ற தேர்தலில் 240 இடங்களைப் பிடித்தாலும் பெரும்பான்மை பெற தவறிய பா.ஜ.க.வை விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கண்ணியமான தன்மை, பணிவு என்பது ஒரு சேவகர் அல்லது பொது ஊழியரின் சிறந்த பண்பு. ஆனால் அதை சிலர் செய்யவில்லை. ஒரு சேவகர் தன்னை பற்றி நினைக்கக் கூடாது. மக்களை பற்றி நினைக்கவேண்டும் என கூறியிருந்தது, அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சிப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான பவன் கெரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பிரதமர் மோடி அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, நாம் ஏன்? பேசவேண்டிய நேரம் வரும்போது பேசியிருந்தால் எல்லோரும் அவரை சீரியசாக எடுத்திருப்பார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ்சும் அமைதி காத்தது. அவர்களும் அதிகாரத்தை அனுபவித்தனர் என தெரிவித்தார்.
#WATCH | Delhi: On RSS leader Indresh Kumar's statement, Congress leader Pawan Khera says, "Who takes RSS seriously? PM Modi does not take them seriously, so why should we? ... If he had spoken when it was time to speak, everyone would have taken him seriously. At that time, they… pic.twitter.com/uELM48kddZ
— ANI (@ANI) June 14, 2024
- உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
- உ.பி. மற்றும் மகாராஷ்டிரவில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பின்னடைவாகக் கருதப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
ஏற்கனவே மந்திரிகளாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிர மக்கள் பா.ஜ.க.வினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அயோத்தியில் அவர்களால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. அயோத்தி மக்களை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்? என்.டி.ஏ. கூட்டணியின் தற்போதைய விளக்கம் நாயுடு சார்ந்த கூட்டணி அல்லது நிதிஷ் சார்பு கூட்டணி என தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கெரா கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக இருந்த ராதிகா கெரா கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய ஊடகப் பிரிவு தேசிய செயலாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ளார்.
… Time To Start a New Journey…
— Supriya Bhardwaj (@Supriya23bh) May 14, 2024
I am deeply grateful to Congress leadership - Congress Parliamentary party chief Mrs Sonia Gandhiji; Congress President Mr Mallikarjun @kharge ji, my leader Mr @RahulGandhi and Mrs @priyankagandhi along with Mr @kcvenugopalmp and Mr @Pawankhera… pic.twitter.com/Upk4EHOx49
- காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது
- காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்
அண்மையில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி,"இந்தியாவில் ஆட்சி அமைக்க விரும்பினால், குறைந்தது 272 இடங்கள் தேவை. பாஜகவைத் தவிர, நாட்டில் வேறு எந்த அரசியல் கட்சியும் 272 இடங்களில் போட்டியிடவில்லை, பின்னர் அவர்கள் (காங்கிரஸ்) எப்படி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"காங்கிரஸ் கட்சி இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 272 இடங்களில் கூட போட்டியிடவில்லை என்றால் எப்படி ஆட்சி அமைப்பது என்று பிரதமர் கூறுகிறார்.
மோடி அவர்களே... உங்களது கணித திறமை அபாரமானது. நீங்கள் முழு கணிதவியல் பாடத்திற்கான டிகிரி வைத்திருக்கிறீர்களா. உத்தரபிரதேசத்தில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியராக உங்களை அடுத்த மாதமே நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
The Congress Party has so far declared 326 seats.
— Pawan Khera ?? (@Pawankhera) May 1, 2024
Do you also have a degree in entire mathematics, Mr @PMOIndia ? https://t.co/VHueKKpaun
- தேர்தலில் போட்டியிட தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்
- என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்று கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சியின் போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா மீது அசாமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த அவர், இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர். தகவலை காண்பித்தனர். தொடர்ந்து போலீசார் கேட்டுக் கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமானத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானத்தை புறப்படவும் விடவில்லை. விமானம் புறப்பட்டுச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து துணை ராணுவப் படையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் விமானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, உத்தர பிரதேசம் மற்றும் அசாமில் பவன் கேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் அவரை விடுவிக்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்