search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pd usha"

    • வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை தீர்ப்பு.
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் அப்பீல் செய்தார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்த இந்திய ரசிகர்கள், மருத்துவக் குழுவினர் தான் இதற்கு பொறுப்பு என்றும், ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில், வீரர்களின் எடை விவ காரத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி வரு கிறார்கள்.

    இந்த நிலைிய்ல வினேஷ் போகத் எடை பிரச்சினைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா ஆவேசமாக கூறி உள்ளார். இது தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவக் குழு பொறுப்பாகாது.

    ஒவ்வொரு விளை யாட்டுகளிலும் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு என்று தனிக்குழு இருப்பார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுவார்கள்.

     ஆனால் இந்திய ஒலிம் பிக் குழு, ஒலிம்பிக் தொடங்குவதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான், வீரர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். அதுவும் போட்டியின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகோ வீரருக்கு ஏற்படும் காயம் உள்ளிட்ட பிரச்சனைகளை கவனித்துக் கொள்வார்கள்.

    மேலும் ஊட்டச்சத்து நிபுணர், பிஸியோ தெரபிஸ்ட் இல்லாத வீரர்களுக்கு, அந்த பணிகளையும் கூடுதலாக இந்த மருத்துவக் குழு செய்யும்.

    எனவே வினேஷ் போகத் விவகாரத்தில் தின்ஷா பர்தி வாலா தலைமையிலான மருத்துவக் குழுவை குறை சொல்வது நியாயமல்ல.

    இவ்வாறு பி.டி. உஷா கூறியுள்ளார்.

    ×